நெல்லையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய இந்து மக்கள் கட்சியினர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தின எதிர்ப்பு.. காதலர்களை துரத்தி சென்ற ஹிந்துத்துவ அமைப்பினர்

  நெல்லை: நெல்லை மாவட்டத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  நெல்லை மாவட்டத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க தாலி, மாலையுடன் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  Hindu people party workers arrested for opposing valentines day

  மேலும், நெல்லைமாவட்ட அறிவியல் மையத்திற்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும், அதற்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியும் 50க்கும் மேற்பட்ட தாலி மற்றும் மாலைகளுடன் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து போராட்டக்காரர்களை கைது செய்தனர். அதே வேளையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் நெல்லை ரயில் நிலையத்தின் முன்பு கேக் வெட்டி பட்டாசு வெடித்து காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

  கேக் வெட்டும் நேரத்தில் காதலர் தினத்துக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியும், புறா மற்றும் பலூன் பறக்கவிட்டும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Hindu people party workers arrested for opposing valentines day in Nellai. At the same time Valentines day Celebrated by DYFI with cake cutting Function.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற