கட்டற்ற மின்னூலகத் திறப்பு விழா

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (30.08.2017) கட்டற்ற மின்னூலகத் திறப்பு விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமையேற்று, மின்னூலகத்தை திறந்து வைத்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

Hitech E-library unveiled in Karaikudi school

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம், சிவகங்கை மாவட்ட உதவி திட்ட ஒருங்கினைப்பாளர் என்.திருஞானம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் எம். அழகு சுந்தரி அவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுத் தலைவர் எஸ். சகாய செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Hitech E-library unveiled in Karaikudi school

மாயன் டெக்னாலஜிஸ், தி காரைக்குடி மற்றும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் சார்பாக விக்னேஷ், மின்னூலகம் பற்றியும், அத்திட்டத்தின் நோக்கங்களை பற்றி கூறியும் அறிமுகவுரையாற்றினார். மேலும் 24மணி நேரமும் இயங்கும், இணையம் தேவை இல்லை, தரவு கட்டணங்களும் இல்லை, எளிதாக பகிர முடியும் போன்ற பயன்பாடுகள் பற்றியும் கூறினார்.

Hitech E-library unveiled in Karaikudi school

கட்டற்ற மின்னூலகம் பற்றிய பிரசுரத்தை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. பி. மகேஸ்வரி அவர்கள் வெளியிட மாவட்டக் கல்வி அலுவலர் பெற்று கொண்டார். கட்டற்ற மின்னூலகம் பற்றிய கையேடை, சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வெளியிட, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம், சிவகங்கை மாவட்ட உதவி திட்ட ஒருங்கினைப்பாளர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

Hitech E-library unveiled in Karaikudi school

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அவர் தனது சிறப்புரையில் இம்மின்னூலகத்தை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி, கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாயன் டெக்னாலஜிஸ் நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் விஜயகாந்தி அவர்கள் கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் கோமதி செய்திருந்தார்கள். பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+