என்னா வெயில்... ஹாட்டஸ்ட் சண்டே... வேலூரில் 109 டிகிரி... இன்னும் சுடுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று வெயில் சுட்டெரித்தது வேலூரில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் இன்னும் இரண்டு தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போய் வறட்சி தாண்டவமாடும் நிலையில் வெப்பத்தின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குளம் குட்டைகளில் தேங்கியிருந்த சிறிதளவு தண்ணீரும் சூரியனால் உறிஞ்சப்பட்டு கால்நடைகளுக்குக் கூட தண்ணீரில்லா நிலை ஏற்பட்டுள்ளது.

வர்தா புயலால் மரங்கள் இல்லாத பெருநகரமாக சென்னை மாறிவிட்டதால் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஞாயிறுக்கிழமையான நேற்று உஷ்ணத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. பலருக்கும் உடல் எரிய ஆரம்பித்து விட்டது.

வேலூரில் 109 டிகிரி பாரன்ஹீட்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணி மற்றும் வேலூரில் 109 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போல், கரூரில் 108 டிகிரி பாரன் ஹீட் பதிவாகியுள்ளது.

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்

சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி பாரன்ஹீட்டும் நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அடுத்த இரு தினங்களுக்கு அதிகளவில் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல மாவட்டங்களில் அனல்

பல மாவட்டங்களில் அனல்

சென்னையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக 106 டிகிரி வரை பதிவானதுதான் அதிகபட்ச வெப்பமாகும். இதேபோல மதுரை, திருச்சி, நெல்லை, கடலூரில் 105 டிகிரியும், தருமபுரி, சேலம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் 104 டிகிரி வெப்பமும் பதிவானது.

குளு குளு பிரதேசங்கள்

கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் குளுகுளு பகுதியை நாடிச் செல்கின்றனர். உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு என கோடை வாசஸ்தலங்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. இன்றும் சிலரோ அண்டார்டிகா போகக் கூடத் தயாராக உள்ளனர். வருணபகவான் மனது வைத்து கோடை மழை பெய்தால் மட்டுமே வெப்பம் தணியும்... மழை பெய்யுமா?

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The hottest sunday in Tamil Nadu Vellore touch 109 degree FH temparature.In many interior parts of the State, including Madurai, Cuddalore Salem the day temperature scaled to 105 degree FH.
Please Wait while comments are loading...