For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் தரப்பில் பெரிய பெரிய ஓட்டை... ராம்குமார்தான் குற்றவாளி என்பதை எப்படி நம்புவது?

Google Oneindia Tamil News

சென்னை: சுவாதியைப் படு கொலை செய்தது ராம்குமார்தான் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க போலீஸ் தரப்பு பெரும்பாடு பட வேண்டி வரும் என்று தெரிகிறது. காரணம், அத்தனை ஓட்டைகள் உள்ளன.

சாதாரண மனிதர்களுக்கே ஏராளமான சந்தேகங்கள், கேள்விகள் கிளம்பி வருகின்றன என்றால் கோர்ட்டில் எப்படியெல்லாம் கேட்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. ஆனால் இதையெல்லாம் காவல்துறை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதிலும் குழப்பமே நிலவுகிறது.

ராம்குமார் கைது முதல் அவரை சிறையில் அடைத்தது வரை ஏகப்பட்ட குழப்பங்கள் காணப்படுகின்றன. இதை அவரது வக்கீலே எழுப்பியும் உள்ளார். அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு விடை இல்லை.

யாரைக் காப்பாற்ற முயற்சி?

யாரைக் காப்பாற்ற முயற்சி?

நிச்சயமாக ராம்குமார் இந்தக் கொலையைச் செய்யவில்லை. அவசர கதியில் அவரைப் பிடித்து வழக்கில் கோர்த்து விட்டுள்ளனர் என்று சொல்கிறார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. யாரையோ காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் அடித்துச் சொல்கிறார்.

3 மாத்தில் எப்படி ?

3 மாத்தில் எப்படி ?

மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்த ராம்குமார், போலீஸார் நீட்டிய தாள்களில் கையெழுத்துப் போட்டுள்ளார். அதைப் படித்துப் பார்க்க அவர் அனுமதிக்கப்படவில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட பணிக்கப்பட்டுள்ளார். மேலும் 3 மாதத்திற்குள் சுவாதியை காதலித்து கொலை செய்யும் அளவுக்குப் போய் விட்டதாக ராம்குமார் கூறியிருப்பதாக போலீஸார் கூறுவது நம்பும்படியாக இல்லை.

யார் அந்த நண்பர்கள்?

யார் அந்த நண்பர்கள்?

தனது நண்பர்கள்தான் போட்டு விடு என்று கூறியதாகவும், அதன்படியே கொலை செய்ததாகவும் ராம்குமார் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் யார் அந்த நண்பர்கள் என்பது குறித்து போலீஸ் தரப்பில் விசாரணையே நடத்தப்படவில்லை. அந்த நண்பர்களின் பெயர் என்ன என்பதையும் போலீஸார் தெரிவிக்கவில்லை.

இயக்கியது யார்?

இயக்கியது யார்?

உண்மையில் ராம்குமாரை சிலர் கருவியாக பயன்படுத்தியுள்ளனர். அவர்களுக்காகவே ராம்குமாரை பலிகடாவாக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற ஒரு தரப்பு முயற்சிப்பதாகவே தெரிகிறது. இது போலீஸாருக்கும் தெரியும் என்றே தோன்றுகிறது என்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கேட்கிறார்.

ஏன் இப்போது தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும்?

ஏன் இப்போது தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும்?

ராம்குமாரைக் கைது செய்யச் சென்றபோது தற்கொலைக்கு அவர் முயன்றதாக போலீஸ் கூறுகிறது. உண்மையில் ராம்குமாருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்திருந்தால் அதை அவர் எப்போதே செய்திருக்கலாமே.. போலீஸார் வந்து பிடிக்கும் வரை ஏன் அவர் காத்திருக்க வேண்டும். இதுவும் இடிக்கிறது.

கமிஷனர் எப்படி அப்படிக் கூறலாம்?

கமிஷனர் எப்படி அப்படிக் கூறலாம்?

போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனே பகிரங்கமாக ராம்குமார்தான் குற்றவாளி என்று ஊடகங்களைக் கூப்பிட்டுக் கூறுகிறார். வழக்கு விசாரணை முடியாமல், தீர்ப்பு வராத நிலையில் எப்படி அந்த முடிவுக்கு அவர் வந்தார். அப்படிச் சொல்லச் சொல்லியது யார்.

படங்கள் குழப்புகிறதே

படங்கள் குழப்புகிறதே

போலீஸ் தரப்பில் குற்றவாளி குறித்த படங்கள் தொடர்பாக பல குழப்பங்கள் உள்ளன. போலீஸ் வெளியிட்ட படங்களிலேயே முரண்பாடுகள் காணப்பட்டன. அதை விட முக்கியமாக அந்த நபரும், கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரும் ஒருவர்தான் என்று தடயவியல் துறை இதுவரை அறிக்கை தரவில்லை என்பது முக்கியமானது.

சுவாதி பெற்றோர் மெளனம் ஏன்?

சுவாதி பெற்றோர் மெளனம் ஏன்?

சுவாதியின் பெற்றோர் அமானுஷ்யமான அமைதி காக்கின்றனர். அவர்களை பேச விடாமல் சிலர் தடுப்பதாக தெரிகிறது. அது ஏன். அவர்களைப் பேச விடாமல் தடுப்பது எது என்று பல குழப்பங்கள் இந்த வழக்கில் உள்ளன. இதற்கெல்லாம் போலீஸ் தரப்பில் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறுகிறார் கிருஷ்ணமூர்த்தி.

English summary
Ramkumar's advocate Krishnamurthy has asked the police how come they decided his client as the killer of Swathy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X