எப்படி புலியை பிடிப்பது என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்: வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
ஊட்டி : ஆட்கொல்லி புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கிறோம். அது முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி புலியை பிடிப்பது என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினக்குடியில் 3 பேரை கடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலியை தேடி கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி நடக்கிறது. புலியை சுட்டுக்கொல்ல கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆட்கொல்லி புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கிறோம் என்றார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசுகையில், "வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "4 முறையாக கூடலூரில் ஒரு புலி ஆட்களை அடித்துள்ளது. அந்தப் புலியை பிடிக்கும் நோக்கில் கூடலூரில் பகுதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

புலி பிடிக்கும் நிபுணர்
தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், கேரளா புலிகள் பிடிக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். முதுமலை மட்டுமின்றி தேவன் எஸ்டேட், மே பீல்ட் ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

2 கும்கி யானைகள்
புலியை பிடிக்கும் பணியில் 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் 3 ட்ரோன்கள், அதி நவீன கேமராக்கள், துப்பாக்கிகள், மயக்க ஊசி துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புலியை பிடிக்க முயற்சி
ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. புலி விரைவில் சிக்கும் என நம்புகிறோம். புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கிறோம். அது முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி புலியை பிடிப்பது என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

சீக்கிரம் பிடிப்போம்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. ஒரு புலி ஒரே பகுதியில் இருக்காமல் மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ஒரு நிமிடத்தில் புலியை சுட்டு விடலாம். ஆனால் வேறொரு புலிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புலியை பிடிப்போம். புலி தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications