திருப்பூரில் டீ குடித்த கேப்பில் பைக்கிலிருந்து பறிபோன இரண்டு லட்சம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தைக் கொள்ளையடித்தவர்களை போலீசர் தேடி வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று, முனுசாமி அவினாசி சென்றுவிட்டு, திருப்பூருக்கு வரும் வழியில் இருசக்கர வாகனத்தை ஒரு கடையின் முன்பு நிறுத்தி விட்டு டீ குடிக்கப் போனார்.

Huge Money looted from two wheeler In Thiruppur

கடைக்குள் சென்று திரும்பி வந்து பார்க்கும் போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு பணத்தைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Thiruppur, some unknown persons looted real estate owner's money from his two wheeler.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற