For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்- தமிழக அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகத்தில் உள்ள 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக 1000 ஆசிரியர் பணியிடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2014-15ம் கல்வி ஆண்டில் 100 அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். இதை தொடர்ந்து தரம் உயர்த்தப்படும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் பட்டியலை தமிழக பள்ளி கல்வி துறை தயாரித்து வந்தது.

தற்போது அப்பட்டியலில் உள்ள 100 உயர் நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் உள்பட 9 பணியிடங்களும், 100 பள்ளிகளுக்கு தலா 1 தலைமை ஆசிரியர் பணியிடமும் அனுமதிக்கப்படுகிறது. இந்த 100 பள்ளிகளுக்கும் புதிதாக 1000 பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

English summary
The Tamilnadu government has decided to upgrade hundred government schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X