கோழிக்கோடு சிபிஎம் கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை... கமல் விளக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோழிகோட்டில் நடத்தும் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கோழிகோட்டில் வரும் சனிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்து கொள்ள போவதாகவும், அக்கட்சியில் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Recommended Video

இந்நிலையில் இதுபோன்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
Embarrassing. Was not asked for Calicut meeting with Kerala CM. I am at Bigg boss all saturdays till Oct. Best wishes for the function.
— Kamal Haasan (@ikamalhaasan) September 13, 2017
வரும் அக்டோபர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பிசியாக இருப்பேன். கூட்டத்திற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் கமல் அக்கட்சியில் சேர போவதாக வந்த தகவல்கள் வதந்தி என்பது தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications