என்னை கேட்டா.. நான் என்ன இன்கம்டேக்ஸ் ஆபிசரா? செய்தியாளர்களிடம் பாய்ந்த தம்பிதுரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கலந்துகொண்டார்.

பிக்பாஸ்,மெர்சல் பார்க்க அல்ல

பிக்பாஸ்,மெர்சல் பார்க்க அல்ல

மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கிய அவர், இதை வைத்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் பிக்பாஸ், மெர்சல் படம் பார்க்க இந்த லேப்டாப் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ரெய்டு குறித்து கேள்வி

ரெய்டு குறித்து கேள்வி

இதைத்தொடர்ந்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலாவின் உறவினர்கள் வீடு, ஜெயா டிவி, நமது எம்ஜிஆரில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இன்கம்டேக்ஸ் ஆபிசரா?

இன்கம்டேக்ஸ் ஆபிசரா?

அதற்கு பதிலளித்த தம்பிதுரை என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்? என்றார். மேலும் நான் என்ன இன்கம்டேக்ஸ் ஆபிசரா? என்று பதில் கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களிடம் பாய்ச்சல்

செய்தியாளர்களிடம் பாய்ச்சல்

வருமான வரித்துறை சோதனையைப் பற்றி சோதனை செய்யும் அதிகாரிகளிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் என காட்டமாக பதிலளித்தார். நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ரெய்டு குறித்து கேட்டதற்கு எனக்கு ரெய்டு குறித்து எனக்கு எதுவும் தெரியாது நான் இப்போது தான் எழுந்தேன் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MP Thambidurai became angry when repoters were asking about the raid. He said I am not income tax officer. i dont know said Thambidurai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற