கமலுக்கு நாங்க உறுதுணையாக இருப்போம்.. நடிகர் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் மீதான விமர்சனங்களை முதல்வர் தவிர்த்திருக்கலாம் எனவும் தனக்கு அரசியலில் ஈடுபடுவதில் விருப்பம் இல்லை என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்ட நபரை 2 வாரத்தில் அடையாளம் காட்டுவேன்.

I'm not interested in politics, says Vishal

கமல்ஹாசன் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம். கமல்ஹாசனுக்கு, நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும். நாங்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவே நிற்போம், வழக்கு போட்டாலும், அதை சந்திக்கக்கூடியவர்தான் கமல்.

ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்த பிறகே தான் கருத்து தெரிவிக்க முடியும். எனக்கு அரசியலில் ஈடுபடுவதில் விருப்பம் இல்லை என்றார்.

கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் நடித்து கொண்டு இருக்கிறார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின்பு கருத்து தெரிவித்தால் நாங்கள் பதில் சொல்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக விஷால் கருத்துக் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
I'm not interested in politics, says actor Vishal.
Please Wait while comments are loading...