ப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை.. ஆ.ராசா பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை.. ஆ.ராசா

  புதுக்கோட்டை: ப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை என ஆ.ராசா பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்தும் பேசியுள்ளார்.

  2ஜி வழக்கில் டிசம்பர் 21ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

  Manmohan Singh didn't know about 2g says Raja

  இந்த தீர்ப்பிற்கு பின் ராசா ப.சிதம்பரம் குறித்து பேசி இருந்தார். அப்போது ப.சிதம்பரத்திற்கு எதிராக ராசா பேசியதாக கூறப்பட்டது.

  தற்போது புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை மறுத்து இருக்கிறார். அதில் ப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை என பேட்டி அளித்து இருக்கிறார்.

  மேலும் ''திமுக - காங். கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது. எங்கள் கூட்டணி தொடரும்'' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK member Raja says that, he didn't speak against P Chidambaram. He also says that alliance between Congress and BJP will continue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற