For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமான வரி வழக்கு: ஏப்ரல் 3ல் ஜெயலலிதா, சசிகலா ஆஜராக உத்தரவு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

I-T case: Jayalalithaa, Sasikala told to appear in court
சென்னை: வருமான வரி கணக்கு அறிக்கையை தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 மற்றும் 1992ல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

வழக்கை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை படித்துப் பார்க்க ஜெயலலிதா தரப்பு 3 வார காலம் அவகாசம் கோரியது.

ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நீதிபதி 2 வார காலம் அவகாசம் அளித்துள்ளார். ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

English summary
The Additional Chief Metropolitan Magistrate (ACMM) Court -I, Egmore on Thursday directed Chief Minister Jayalalithaa and her close aide, N. Sasikala to appear before it on April 3 in connection with income tax cases filed against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X