ஆர்.கே. நகரில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- டிடிவி தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என டிடிவி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிக கேட்டுக்கொண்டதாலேயே ஆர்கே.நகரில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் இறங்கியுள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சசிகலா தரப்பு அதிமுக சார்பில் டிடிவி தினகரன் இன்று ஆர்கே.தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் தைரியமாக போட்டியிடவுள்ளார்.

ஆர்கே.நகரில் தினகரன் போட்டி

ஆர்கே.நகரில் தினகரன் போட்டி

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் சசிகலா தரப்பு அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டம் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஞானத்தாய் சசிகலாவுக்கும் நன்றி

ஞானத்தாய் சசிகலாவுக்கும் நன்றி

இதைத்தெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆர்.கே. நகரில் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஞானத்தாய் சசிகலாவுக்கும் நன்றி என டிடிவி தினகரன் கூறினார்.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்

திமுகவை அழிக்கவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார் என்றும் டிடிவி தினகரன் கூறினார். மேலும் ஆர்கே.நகர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஜெ.கூட பெறவில்லையே

ஜெ.கூட பெறவில்லையே

இதைத்தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை. எப்படி நீங்கள் எப்படி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறீர்கள் என்றனர்.

அனுதாப ஓட்டுகள் கிடைக்கும்

அனுதாப ஓட்டுகள் கிடைக்கும்

இதற்கு பதிலளித்த தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு காரணமாக அவரின் மீதுள்ள பற்றால் அனுதாப ஓட்டுகள் கிடைக்கும். அதன்மூலம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

தைரியமாக போட்டியிடும் தினகரன்

தைரியமாக போட்டியிடும் தினகரன்

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன் தைரியமாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran contesting in RK.Nagar by election. He says that he will win 50,000 votes difference.
Please Wait while comments are loading...