ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. பொம்மன்-பெள்ளி கதையை கேட்டு உருகிய பிரதமர் மோடி.. சூப்பர் வாக்குறுதி!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய தெப்பக்காடு பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பொம்மன்-பெள்ளி கதையை நினைவுப்படுத்தி பிரதமர் மோடி ஆறுதல் கூறி அவர்களின் சேவையை பாராட்டி வாக்குறுதியும் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி நேற்று முதல் தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் செய்ய தொடங்கினார். நேற்று காலை ஹைதரபாாத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பிறகு அங்கிருந்து நேற்று மதியம் சென்னை வந்தார்.

If you wants any help please call me, PM Modi assured to Oscar Bomman-Belli couple

சென்னை விமான நிலையத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு சென்னை சென்ட்ரலில் நடந்த விழாவில் சென்னை-கோவை வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் வேலை முடிந்த மேம்பாலம், சாலைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். சென்னை நிகழ்ச்சியை முடித்த பிரதமர் மோடி மைசூர் சென்றார். அதன்பிறகு இன்று காலை மைசூரில் இருந்து மீண்டும் தமிழ்நாடு வந்தார்.

If you wants any help please call me, PM Modi assured to Oscar Bomman-Belli couple

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி சென்றார். ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை அவர் சந்தித்து கலந்துரையாடி இருவரையும் பாராட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி தங்களிடம் கலந்துரையாடியது பற்றி பெள்ளி கூறியதாவது: பிரதமர் மோடி இன்று காலையில் காரில் இறங்கி வந்து எங்களை சந்தித்தார். டெல்லிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என அழைத்தார். எங்களோடு போட்டோக்கள் எடுத்து கொண்டார். மேலும் என்ன தேவை என்றாலும் என்னிடம் கேளுங்கள் என கூறினார்.

யார் உதவி செய்யாமல் இருந்தாலும் என்னிடம் தாராளமாக கேட்கலாம். உங்களுக்கு எல்லாமே செய்து கொடுக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளீர்கள். எல்லாமே செய்திகளில் கேட்டேன். உங்களின் பிள்ளை இறந்தது, கஷ்டப்பட்டதை சொல்லிவிட்டீர்கள். இனி கஷ்டங்களை நீங்கள் சொல்ல வேண்டாம். நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றார்.

If you wants any help please call me, PM Modi assured to Oscar Bomman-Belli couple

யானை குட்டி வளர்ப்பு பற்றியும் கேட்டார். அப்போது சின்னவயதில் அடிப்பட்டு வந்த யானை குட்டியை அதிக பாசம் கொடுத்து வளர்ந்தோம். இதனால் யானை எங்களிடம் நெருக்கமாக பழகியது. நாங்கள் சாப்பிடும்போது அதை யானையும் சாப்பிடும். அந்த சாப்பாட்டையும் நாங்கள் சாப்பிட்டோம். இதுபோன்ற நிறைய கஷ்டங்களை நாங்கள் சந்தித்துள்ளோம் என்றோம். அதற்கு படத்தை பார்க்கும்போதே தெரிந்தது என்றார்.

மேலும் பெரியவன் கொஞ்சம் முரடான (ரகு யானை)இருப்பான் போலயே என கேட்டார். ஆமாம் கொஞ்சம் முரடாக தான் இருக்கும் என்றோம். இந்த சந்திப்பின்போது எங்கள் ஏரியாவில் பள்ளி கட்டி தர வேண்டும் எனது கணவர் கோரிக்கை வைத்தார். நான் வீடு, ரோடு வசதி வேண்டும் என்றேன். ரோடு வசதி இல்லாததால் பிள்ளைகள் மழைக்காலத்தில் சேற்றில் நடக்க முடியாமல் 3 நாட்கள் வரை வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உள்ளதை கூறினேன். ஆர்டர் வரைவில்லை என ரோடு, வீடு கட்டிதர மறுப்பதை தெரிவித்தேன்.

மேலும் ஒரு வீட்டில் 3 முதல் 4 குடும்பம் இருப்பதை கூறினோம். பாதிபேருக்கு வீடு இல்லாததை எடுத்து கூறினேன். அதோடு வீடு வசதி கோரிய மனுக்களை என்னிடம் தந்து பிரதமரிடம் வழங்க கூறினார்கள். அதுபற்றி கூறியபோது கலெக்டரிடம் கொடுங்கள். கலெக்டரிடம் பேசுங்கள். நான் சொல்கிறேன் என நம்பிக்கை அளித்தார்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+