For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிய அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐஐடிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஆசிய அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 56-வது இடத்திலிருந்த சென்னை ஐஐடி 2016-இல் 13 இடங்கள் முன்னேறி 43-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

குவாகரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.) என்ற நிறுவனம் உலக அளவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உலக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல், மண்டல வாரியான தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.

IIT Madras got 43rd place

அந்தவகையில், தற்போது 2016-ஆம் ஆண்டுக்கான மண்டல வாரியான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட பல இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளன.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும், இரண்டாம் இடத்தில் ஹாங்காங் பல்கலைக்கழகமும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த 5 உயர் கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இம்முறை இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) 33-வது இடம் பிடித்துள்ளது. ஐஐடி மும்பை 35-வது இடத்திலும், ஐஐடி டெல்லி 36-வது இடத்திலும் உள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு 56-வது இடத்தில் இருந்த ஐஐடி சென்னை இம்முறை 43-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுபோல கடந்த ஆண்டு 58-வது இடத்தில் இருந்த ஐஐடி கான்பூர் இம்முறை 48-வது இடம் பெற்றுள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக ஐஐடி காரக்பூர் 51-ஆவது இடத்தையும் டெல்லி பல்கலைக்கழகம் 66-ஆவது இடத்தையும், ஐஐடி ரூர்கி 78-வது இடத்தையும், ஐஐடி குவாஹட்டி 94-வது இடத்தையும் பிடித்துள்ளன.

2015ல் 300 இடங்களுக்கு மேல் இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது 251 முதல் 300 இடங்களுக்கு இடைப்பட்ட இடத்துக்கு முன்னேறியுள்ளது. வருகிற செப்டம்பரில் உலக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் வெளியிடும். அதிலும், அதிக எண்ணிக்கையில் இந்திய கல்வி நிறுவனங்கள் சிறப்பிடம் பிடிக்கும் என எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த 2015-இல் ஐஐஎஸ்சி (147 ரேங்க்), ஐஐடி டெல்லி (179) ஆகிய இரண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் முதன் முறையாக உலக அலவிலான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
IIT Madras got 43rd place in QS University Rankings Asia 2016
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X