இளவரசி மகன் விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா?.. மலைத்துப் போன அதிகாரிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா?.. | விவேக்கிற்கு பணத்தால கண்டம்- வீடியோ

  சென்னை : சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் வீட்டில் 3 நாட்களாக நடக்கும் வருமான வரி சோதனையில் தோண்டத் தோண்ட கிடைக்கும் பினாமிகளின் பட்டியலைப் பார்த்து அதிகாரிகள் மலைத்துப் போயுள்ளனர்.

  சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஜெயராமன். இதனால் தனித்துவிடப்பட்ட ஜெயராமனின் மனைவி இளவரசி மூன்று குழந்தைகளோடு தவித்துக் கொண்டிருந்தார்.

  அப்போதுதான் தனியாக கஷ்டப்பட வேண்டாம் என்கூடவே வந்து இருங்கள் என்று இளவரசியை ஜெயலலிதா போயஸ் கார்டனுக்குள் அனுமதித்தார். இதனால் அப்போது சிறு கைக்குழந்தைகயாக இருந்த விவேக் போயஸ் கார்டனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். ஆஸ்திரேலியாவில் பிபிஏ, புனேவில் எம்பிஏ படித்துவிட்டு கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றினார்.

   ஜாஸ் சினிமாஸ் மூலம் அறிமுகம்

  ஜாஸ் சினிமாஸ் மூலம் அறிமுகம்

  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது மருத்து, மாத்திரைகளை எடுத்துவர நம்பத்தகுந்த ஆள் தேவை என்பதால் அப்போது ஜெயிலுக்குள் கொண்டு வருவதற்காக அனுமதிக்கப்பட்ட போது தான் சீனுக்குள் வந்தார் விவேக். 2015ம் ஆண்டு வேளச்சேரி பீனிக்ஸ் மால் வணிக வளாகத்தில் உள்ள 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை கையில் எடுத்தார் விவேக்.

   தியேட்டர் மூலம் போலி பரிவர்த்தணைகள்

  தியேட்டர் மூலம் போலி பரிவர்த்தணைகள்

  அந்த தியேட்டர்களை சுமார் ஆயிரம் கோடி ரூபாய்ககு விவேக் வாங்கியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட போது, தியேட்டர்களை விலை கொடுத்து வாங்கவில்லை, குத்தகைக்கு மட்டுமே எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போன்று திரைப்பட விநியோகத்தில் போலி பரிவர்த்தணைகள், ஜாஸ் சினிமாஸ் மட்டுமல்லாது 136 தியேட்டர்களும் விவேக் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது.

   குத்தகை தான் எடுத்துள்ளேன்

  குத்தகை தான் எடுத்துள்ளேன்

  3 நாட்களாக நடக்கும் வருமான வரி சோதனையில் ஜாஸ் சினிமாஸை குத்தகைக்கு எடுக்க ரூ. 1000 கோடி நிதி எங்கிருந்து வந்தது, தொழில் ரீதியாக யாரெல்லாம் கூட்டாளியாக உள்ளனர் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு வங்கியில் இருந்து கடன் வாங்கித் தான் தியேட்டரை குத்தகைக்கு வாங்கியதாக விவேக் பதிலளித்துள்ளார்.

   விவேக் கட்டுப்பாட்டில் தான் போலி நிறுவனங்கள்

  விவேக் கட்டுப்பாட்டில் தான் போலி நிறுவனங்கள்

  விவேக்கின் தியேட்டர்கள் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டிருப்பது, பினாமிகள் பலரது பெயரில் விவேக் சொத்து வாங்கி குவித்திருப்பதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளின் கண்ணில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. மத்திய கம்பெனி விவகாரத்துறை சந்தேகிக்கும் போலி நிறுவனங்களின் செயல்பாடுகளை மெத்தப் படித்த மேதாவிகளான விவேக்கும், கிருஷ்ணப்ரியாவுமே நடத்தி வருவதாக தொடர் கண்காணிப்பில் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

   தோண்டத் தோண்ட ஆவணங்கள்

  தோண்டத் தோண்ட ஆவணங்கள்

  இதன் அடிப்படையிலேயே கிருஷ்ணப்ரியா, விவேக் வீட்டில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக டேரா போட்டு சல்லடை போட்டு ஜலித்து வருகின்றனர். சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளின் ஆவணங்கள், போலி நிறுகூனங்களில் ரூ. 150 கோடி மதிப்பு சொத்துகள் உள்ளிட்டவை விவேக்கின் வீட்டிலேயே சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  அதிகாரிகளே

  அதிகாரிகளே

  சிறு வயதிலேயே மன்னார்குடி சமஸ்தானத்தில் உச்சஸ்தானத்தில் கோடீஸ்வரனான விவேக் தற்போது வருமான வரித்துறையினரால் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார். போலி நிறுவனங்கள், பினாமி பெயர்களில் சொத்து என்று அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க இவர் செய்திருக்கும் வேலைகளைப் பார்த்து வருமான வரித்துறையினர் மலைத்துத்தான் போயுள்ளனராம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Income tax officers are stumbled upon the evidences against Vivek and Krishnapriya from the raids they conducted for the last 3 days.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற