பெங்களூருவில் பழையபடி கடை கடையாக சிகரெட் போட போகிறேன்... சசிகலாவிடம் சீறிய விவேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரன் மீது கடும் கோபத்தில் விவேக்- வீடியோ

  சென்னை: ஜெயா டிவி உட்பட தம் வசம் இருந்த பொறுப்புகளை தினகரன் தட்டிப் பறித்து வருவதால் இளவரசி மகன் விவேக் கடும் கொந்தளிப்பில் இருக்கிறாராம். இது தொடர்பான பஞ்சாயத்தில் ஆத்திரமடைந்த விவேக், பழையபடி பெங்களூருவுக்கு போய் கடை கடையாக சிகரெட் போட போகிறேன் எனவும் சீறினாராம்.

  சசிகலா சாம்ராஜ்யத்தின் நிறுவனங்களை நிர்வகிக்கும் முன்னதாக பெங்களூருவில் ஐடிசி நிறுவனத்தில்தான் விவேக் பணிபுரிந்து வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்த போதுதான் விவேக் இந்த சாம்ராஜ்யத்துக்குள் அழைக்கப்பட்டார்.

  சசிகலா குடும்பத்தில் போட்டி

  சசிகலா குடும்பத்தில் போட்டி

  அடுத்தடுத்து ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி நிர்வாகம் என விவேக்கின் பாதை ஏறுமுகமாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா சாம்ராஜ்ய நிறுவனங்களை கைப்பற்றுவதில் ஆள் ஆளுக்கு போட்டி போட்டு வருகின்றனர்.

  தினகரன், திவாகரன் குடும்பம்

  தினகரன், திவாகரன் குடும்பம்

  அதுவும் சசிகலா சிறைக்கு போனபின்னர்தான் இந்த போட்டி உக்கிரமடைந்தது. ஒருபக்கம் இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, இன்னொரு பக்கம் தினகரன் குடும்பம், மற்றொரு பக்கம் திவாகரன் குடும்பம் என ஆள் ஆளுக்கு சொத்துகளை கைப்பற்றுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

  சிறையில் பஞ்சாயத்து

  சிறையில் பஞ்சாயத்து

  இப்போது விவேக்கிடம் இருந்து ஜெயா டிவியை தினகரன் குடும்பம் பறித்துவிட்டது. இது தொடர்பாக பெங்களூரு சிறையில் சசிகலா முன்னிலையில் அக்கப்போர் பஞ்சாயத்தும் நடந்திருக்கிறது. விவேக் விவேகம் இல்லாமல் செயல்படுவதாக தினகரன் குடும்பம் போட்டுக் கொடுத்ததால் இந்த பஞ்சாயத்து நடந்திருக்கிறது.

  வியூகம் வகுக்கும் தினகரன் குடும்பம்

  வியூகம் வகுக்கும் தினகரன் குடும்பம்

  அப்போதுதான், பெங்களூருவில் கடை கடையாக சிகரட் போட்டுக் கொண்டிருந்தேன். என்னை அழைத்தீர்கள் என வந்தேன்.. ஆனால் நிர்வாகத்தை கொடுத்துவிட்டு இப்போது அசிங்கப்படுத்துகிறீர்களே.. என் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? என்னால் பழையபடி சிகரெட் போடவும் போக முடியும் என சீறியிருக்கிறார். ஆனால் இந்த சீற்றத்தையெல்லாம் ரசித்தபடியே தினகரன் குடும்பம் ஜாஸ் சினிமாஸுக்கும் மிடாஸுக்கும் குறி வைத்து காய்நகர்த்துகிறதாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sources said that Ilavarasi son Vivek Jayaraman was very upset over RK Nagar MLA Dinakaran.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற