மணப்பாறையில் மணல் சரிவில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணப்பாறை: ஆற்றில் மணல் எடுத்துக்கொண்டிருந்த போது மணல் சரிந்து விழுந்ததால் மணப்பாறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறையைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஆற்றிலிருந்து மணல் எடுத்து விபாபாரம் செய்யும் வேலை செய்துகொண்டிருந்தார். சம்பவத்தன்று கார்த்திக் வழக்கம் போல் மணல் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

In Manappari a man died in Sand sliding

அப்போது, எதிர்பாராதவிதமாக மணல் சரியத் தொடங்கியது. மணல் சரசரவென சரிய கார்த்திக் அதில் சிக்கிக் கொண்டார். உடனடியாக அவரை மீட்க அருகில் ஆள் இல்லாத காரணத்தால் மணல் சரிவில் சிக்கி, மூச்சுத் திணறல் எறபட்டு உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதையடுத்து அங்கு வந்த போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karthick belongs to Manapparai died when he was taking sand in riverside.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற