For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருமான வரித்துறை பிடியில் ராம மோகன ராவ் மகன்.. துருவி துருவி விசாரணை

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மகன் விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள விவேக்கின் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூர் ஸ்பிரிங்ஸ் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வரும் அவரது மகன் விவேக் வீட்டிலும் சோதனை நடந்தது.

Income tax officials doing inquiry with Vivek

விவேக் தனது மனைவி வர்ஷினியுடன் வசித்து வரும் இந்த தனி வீட்டின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 பேர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள விவேக்கின் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரூ.5கோடி வருமானத்தை மறைத்தாக ராம் மோகன் ராவ் மகன் விவேக் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
Income tax officials doing enquiry with Vivek son of TN chief secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X