அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ். முருகன் நெல்லை வீட்டில் ஐடி ரெய்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ். முருகன் வீட்டில் ஐடி ரெய்டு!- வீடியோ

  திருநெல்வேலி : அரசு ஒப்பந்ததாரரான ஆர்.எஸ்.முருகனின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

  விஜயநாராயணத்தை சேர்ந்த முருகன் தற்போது திருநெல்வேலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மதுரை மண்டலத்தில் சாலைப்பணி ஒப்பந்தத்தை யாருக்கு கொடுக்கலாம் என்பதை தீர்மானிப்பவர் முருகன்.

  Income tax raid at government contractor R.S.Murugan Nellai house

  முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆதரவாளரான இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் டெண்டர்களை ஒதுக்க லஞ்சம் வாங்கி பணத்தை குவித்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதையடுத்து அவரிடம் கணக்கில் காட்டப்படாத பணம் இருக்கிறதா என்று வருமான வரித்துறையினர் கணக்கு வழக்குகளை சரி பார்த்து வருகின்றனர்.

  முருகனின் நெல்லை,சென்னை வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பிரிவு சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று கேரள மாநிலம் புனலூரில் ஆர்.எஸ்.முருகனின் மனைவி சிந்துவின் உறவினர் வீடு என மொத்தம் 5 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Government Contractor R.S.Murugan under IT scanner, IT officials conduction raids at his Thirunelveli residence, Chennai office and his wife's relatives house at Kerala.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற