For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் “போலியோ” இல்லை – சேலம் மருத்துவமனையில் “குளோபல் டார்ச்” ஒளிச்சுடர் ஏற்றம்!

Google Oneindia Tamil News

சேலம்: இந்தியாவில் "போலியோ" முற்றிலும் ஒழிக்கப்பட்டதை தெரிவிக்கும் வகையில் சேலம் அரசு மருத்துவமனையில் "குளோபல் டார்ச்" ஒளிச்சுடர் ஏற்றப்பட்டது.

இந்தியாவில் ஆண்டு தோறும் போலியோ தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த நடைமுறை கொண்டுவரப்பட்ட பிறகு இந்தியா முழுவதும் போலியோ நோய் ஒழிக்கப்பட்டது.

India destroyed Polio – global torch lightened in Salem…

இதற்காக நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் டீன் மோகன் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த உலக போலியோ ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ரோட்டரி கிளப் குளோபல் கோ-ஆர்டினேட்டருமான "சுசானே ரே" தலைமையில் ஒளிச்சுடர் ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் சேலம் அரசு மருத்துவனை கண்காணிப்பாளர் சுவாமிநாதன், உதவி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், ரோட்டரி கிளப் தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Salem government hospital announced that India destroyed the polio by the Global torch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X