மத்திய அரசைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள மாட்டிறைச்சித் தடை உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான கலாச்சார ரீதியிலான தாக்குதலைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

Indian Union Muslim League protest against Centarl BJP Govt

" மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை அறிவிப்பை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காரணம் காட்டி சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது நடைபெற்று வரும் வன்முறை தாக்குதலை கண்டித்து வரும் 14.07.2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (முன்னாள் எம்.பி.,) அவர்கள் தலைமையிலும், தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி. முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian Union Muslim League protest against Centarl BJP Govt for Beef Ban.
Please Wait while comments are loading...