For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சில்க் ஸ்மிதா'வுடன் ஆடும் ராஜபக்சே.. இது அதிமுகவின் இன்னொரு களேபர பேனர்!

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் ஆங்காங்கே வித்தியாசமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளியன்று இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளப் பக்கத்தில் தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

Interesting banner condemning Rajapakse

தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை வேறு வகையில் திரித்து இழிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

மக்கள் பிரதிநிதியான முதல்வரைக் குறித்து பெண் என்றும் பாராமல் இவ்வாறு தரக்குறைவாக கட்டுரை வெளியிட்ட இலங்கைக்கு எதிராக கண்டங்களும், எதிர்ப்பும் வலுத்தது. மேலும், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன.

அதன்படி, திருநெல்வேலியில் வைக்கப்பட்டிருந்த வித்தியாசமான சுவரொட்டி...

ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி...

சிங்கள அகதிகளின் நலவாழ்வுக்கு அதிபர் ராஜபக்சேவின் மாபெரும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி என அந்த பேனரில் எழுதப்பட்டுள்ளது.

பதிவு எண் 420...

தமிழ்நாடு வாழ் சிங்களர்கள் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதன் பதிவு எண் என 420 குறிக்கப்பட்டுள்ளது.

Interesting banner condemning Rajapakse

இலங்கைத் தூதரகம்...

இந்த ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட் அனைத்து இலங்கைத் தூதரகங்களிலும் கிடைக்கும் என இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

சில்க்கிற்கு அருகில் ராஜபக்சே...

இந்த விளம்பரத்தின் முக்கிய விஷயமே அதில் இடம்பிடித்துள்ள புகைப்படம் தான். ராஜபக்சே கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் அருகே நிற்பது போல் கிளுகிளு போட்டோவை இதில் இடம் பெற்றுள்ளது.

பாளையில் நடக்கிறது...

மேலும், இந்தக் கலை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 32ந்தேதி நடைபெற உள்ளதாகவும், நிகழ்ச்சி நடைபெறும் இடம் பாளையங்கோட்டை ஜவகர் மைதானம் என எழுதப்பட்டுள்ளது.

விளம்பர உதவி....

விளம்பர உதவி என்ற இடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம், பாளை பகுதி என எழுதப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In Tirunelveli someone has kept an Interesting banner condemning srilankan president Rajapakse in a different way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X