அந்த வீடியோல இருக்குறது எச்.ராஜா இல்லை பாஸ்.. அவர் அட்மின்.. நம்புங்க!
சென்னை: புதுக்கோட்டையில் போலீஸ் மற்றும் நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ வைரலாகி உள்ளது. இது எச்.ராஜா கிடையாது அவர் அட்மின் என்று கூறி மக்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசுக்கும் நீதிமன்றத்திற்கு எதிராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்.ராஜா கொச்சையாக பேசியுள்ளார். நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது.

டிவிட் செய்து மாற்றுவார்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவ்வப்போது ஏதாவது டிவிட் செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அவர் மட்டுமில்லாமல் பாஜக தலைவர்கள் இப்படி செய்து மாட்டிக்கொள்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. பெரியார் குறித்தும், மக்கள் குறித்தும் அடிக்கடி ஏதாவது டிவிட் செய்து பிரச்சனையில் சிக்கி வைரலாவார்.

எப்படி எஸ்கேப்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் எதையாவது சொல்லிவிட்டு கடைசியில் இதை நான் சொல்லவில்லை அட்மின் சொல்லிவிட்டார் என்று எஸ்கேப் ஆவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இதை வைத்து எப்போதும் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்வதும் வழக்கமாக உள்ளது. இப்போது அவர் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
வீடியோவாக
இந்த முறை எச்.ராஜா டிவிட் செய்து சர்ச்சையில் சிக்காமல் நேரடியாக வீடியோ மூலம் சர்ச்சையில் சிக்கி உள்ளார். போலீசை நேருக்கு நேர் நின்று, படங்களில் ஹீரோ சவால் விடுவது போல கொச்சையான வார்த்தைகளில் பேசி உள்ளார். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்பட்ட இந்த வீடியோதான் தற்போது டிவிட்டரில் ஹாட் டாப்பிக்.

அட்மீன் சொன்னது
இதையும் அவர், நான் சொல்லவில்லை இது என் அட்மின் சொன்னது என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் வீடியோவே வெளியாகி உள்ளதால் அவர் அப்படி சொல்ல வாய்ப்பில்லை, இந்த முறை ஆதாரம் இருக்கிறது என்று மக்கள் வீடியோவை எடுத்துக் காட்டுவார்கள். ஒருவேளை, அந்த வீடியோவில் இருப்பதே நான் கிடையாது அதுவும் என் அட்மின்தான் என்று எச்.ராஜா சொன்னால்.. சொன்னாலும் சொல்வார்!