கனமழை காரணமாக வீட்டில் இருந்தே பணி செய்ய ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்கள் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

  சென்னை : தீவிரமடைந்து வரும் பருவமழையால் சென்னையில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளன.

  சென்னையில் பல்வேறு ஐ.டி.நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், பெருங்குடி பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

  IT Companies in Chennai are requested their Employees to avail Work from home option

  கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால், புறநகர் பகுதிகளில் பெருமளவு மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பணிக்குச் சென்ற ஊழியர்கள் திரும்ப முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இரு நாட்களாக மழை சிறிது குறைந்த நிலையில் நேற்றில் இருந்து மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

  கனமழையால் பல ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில் மீதம் இருப்பவர்களை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஐ.டி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு புது உத்தரவை பிறத்து உள்ளார்கள். அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றும், வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அதுபோல பல பணியாளர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளிவரமுடியாத அளவுக்கு மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் வீட்டில் இருந்தே பணி செய்ய ஐ.டி.நிறுவனங்கள் அனுமதித்துள்ளன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  IT Companies are requested their Employees to avail Work from home option because of heavy rain lash in the city.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற