For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சம் இழப்பு.. வட்டிக்கு மேல் வட்டி.. விபரீத முடிவு எடுத்த ஐ.டி ஊழியர்

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் பணத்தை இழந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தன். இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியாகும்.

2 எம்பிக்கள்.. 1 அமைச்சர்.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த திடீர் தலைவலி.. அவசரமாக நடந்த திமுக மீட்டிங்?2 எம்பிக்கள்.. 1 அமைச்சர்.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த திடீர் தலைவலி.. அவசரமாக நடந்த திமுக மீட்டிங்?

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ) நடைபெற்றது. தனது வாக்கை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன், வாக்கை பதிவு செய்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

ஆனந்தன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. சென்னையில் வேலை பார்க்கும்போதும் எந்த நேரமும் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இரவு, பகல் என எந்த நேரமும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடியதன் மூலம் அவர் முதலில் சிறிதளவு பணம் வென்றுள்ளார். அதன்மூலம் ஆசை வலையில் விழுந்ததால் வெறித்தனமாக ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்துள்ளார்.

ரூ.10 லட்சம் பணம்

ரூ.10 லட்சம் பணம்

இதனை தொடர்ந்து கூடுதல் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் லட்சக்கணக்கில் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இறைத்துள்ளார். அதாவது சுமார் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி விளையாடி அவர் இழந்துள்ளார். இதற்காக ரூ.6 லட்சம் வெளியில் இருந்து கடன் வாங்கி இருக்கிறார். வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி சேர்ந்து குட்டி போட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.

பெற்றோர் திட்டினார்கள்

பெற்றோர் திட்டினார்கள்

தேர்தலில் வாக்களிக்க வீட்டுக்கு வந்தபின்பும் ஆனந்தன் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். ஏற்கனவே பணத்தை இழந்த விரக்தியில் இருந்த ஆனந்தன், பெற்றோர் திட்டிய கோபத்தில் செல்போனை உடைத்துள்ளார். இதன்பிறகு தனது அறைக்கு சென்ற ஆனந்தன் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

தற்கொலை

தற்கொலை

'மகன் நீண்ட நேரமாக ஏன் வெளியே வரவில்லை' என்று சந்தேகம் அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தபோது ஆனந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்து தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆன்லைனில் ரம்மிக்கு ஒரேடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
IT employee loses Rs 10 lakh by playing online rummy committed suicide. The public has demanded an end to online rummy in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X