ஒப்பந்ததாரர்கள் மூலம் அரவக்குறிச்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்... கரூரில் ஐடி ரெய்டில் அம்பலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது வருமான வரித் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களும் உறவினர்கள் வீடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து கரூரில் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 4 நாள்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது செந்தில் பாலாஜியின் நண்பர் சரவணனின் நிதி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

 IT officials found about money transaction in Aravakkurichi byelection

மேலும் தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 20 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பணப்பரிமாற்றம் தொடர்பாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. தற்போது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒப்பந்ததாரர்கள் மூலம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் பண பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.,

அத்துடன் தற்போது சோதனைக்குள்ளான செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After IT raids done in Senthil Balaji's friends and relatives house, the officials known that money was transferred for Aravakkurichi byelection for voters through contractors.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற