ஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு/ கோவை: ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு ஆகிய இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையாக் கவுண்டர். இவரது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல் ஈரோடு, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் 22 இடங்களில் வருமான வரி சோதனை இன்று நடத்தப்பட்டது. ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தது என்ற புகாரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications