ஐடி ரெய்டுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது.. யார் சொல்றா.. பாஜகவே சொல்கிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: மத்திய அரசை விமர்சிப்பதால் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் உட்பட 160 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

  IT raid not happens because of criticism on Central govt: Tamilisai

  ஜெயா டிவி, ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கோடநாடு எஸ்டேட் என காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசை விமர்சித்ததாலேயே சோதனை நடத்தப்படுவதாக டிடிவி தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது.

  இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அரசை விமர்சிப்பதால் சோதனை நடத்தப்படவில்லை என்றார். முதலிடு மீதான புகாரின் பேரிலேயே சோதனை நடத்தப்படுவதாக கூறினார்.

  மடியில் கனம் இல்லாவிட்டால் எதற்கு பயப்பட வேண்டும் என்றும் எந்த தவறும் இல்லாவிட்டால் பதட்டம் எதற்கு என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். வருமான வரித்துறையினர் அவர்களுக்கு கிடைத்தத புகாரின் அடிப்படையிலேயே சோதனை நடத்துவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

  வருமான வரித்துறை ரெய்டுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அவர் கூறினார். மேலும் வரு ஏய்ப்பு புகாரிலேயே வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilnadu BJP leader Tamilisai said this IT raid not happens because of criticizism on Central govt. She is asking if they dont do wrong then why they are afraiding?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற