ராகுல் காந்தியின் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது... அற்புதம்மாள் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல்

  சென்னை: ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி அளித்துள்ளார்.

  இன்று சிங்கப்பூரில் விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி மரணம் குறித்து பேசினார். அப்போது ''ராஜிவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டோம்.பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன்.'' என்றார்.

  Its very happy that Rahul forgives Rajiv murderers says Arputhammal

  மேலும் ''நானும், எனது தங்கை பிரியங்காவும் எப்போதோ அவர்களை மன்னித்துவிட்டோம். தொடக்கத்தில் எங்களுக்கு கோபம் இருந்தது இப்போது இல்லை'' என்றுள்ளார்.

  இது குறித்து தற்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேட்டி அளித்துள்ளார். ராகுல் காந்தி பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது என்றுள்ளார்.

  அதில் ''''ராஜீவ்கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.27 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல்காந்தி இப்படி சொன்னது மகிழ்ச்சியான செய்தி'' என்றுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Its very happy that Rahul forgives Rajiv murderers says Arputhammal. Previously Rahul Gandhi said that, he forgave Rajiv Gandhi murderers.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற