வீடுகளில் 100 யூனிட் வரை மின்சாரக் கட்டணம் கிடையாது.. ஜெயலலிதா முதல் கையெழுத்து!
சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் வரை கட்டணம் கிடையாது என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றும் வகையிலான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்தைப் போட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் தலைமைச் செயலகம் சென்ற அவர் அங்கு முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று மின்சாரக் கட்டணத்தில் சலுகை அளிக்கும் திட்டம் தொடர்பான கோப்பாகும்.

அதன்படி வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் ரத்து செய்யப்படும். மேலும் விசைத் தறிகளுக்கு 750 யூனிட் வரையிலான மின்சாரத்துக்குக் கட்டணம் கிடையாது. அதேபோல கைத்தறிகளுக்கு 200 யூனிட் வரையிலான மின்சாரத்துக்குக் கட்டணம் கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வீடுகளுக்கான மின் கட்டணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையால் மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ. 1607 கோடி செலவாகும். இதை மானியமாக அரசே வழங்கும்.
இன்று முதல் இவை அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போது வெளியிடப்பட்ட வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்திற்குக் கட்டணம் கிடையாது எந்று ஜெயலலிதா அறிவித்ததற்கு பலரும் விமர்சனம் தெரிவித்தனர். இது சாத்தியமில்ல என்று ஒரு தரப்பும், மின்சாரமே இல்லை, இந்த நிலையில் இது எப்படி சாத்தியம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் இந்தத் திட்டத்திற்குத்தான் முதல்வர் ஜெயலலிதா முதலில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவின்படி, தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications