கும்பகோணம் மகாமகம்.. குளிக்க வரக் கூடாது ஜெயலலிதா... ஈவிகேஎஸ் "அட்டாக்"!
கும்பகோணம்: கும்பகோணம் மகாமகம் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளக் கூடாது. அவர் ஏற்கனவே கலந்து கொண்ட மகாமகம் நிகழ்ச்சியின்போது பலர் உயிரிழந்த துக்க சம்பவம் நடந்து விட்டது. எனவே அவரால் மீண்டும் உயிர்ப்பலி ஏற்படுவதை மக்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.
கும்பகோணம் வந்திருந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கும்பகோணத்தில் நடந்த கடந்த மகாமகத்தின்போது முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா கலந்து கொண்டதால் துக்க நிகழ்வு நடைபெற்று விட்டது.

மகாமகத்தின்போது அவர்கள் இங்கு குளிக்க வந்தார்கள். அதை பார்ப்பதற்கு வந்த பலர் பரிதாபமாக பலியானார்கள். அதனால், வருகின்ற மகாமக விழாவில் குளிக்க ஜெயலலிதாவும், சசிகலாவும் இங்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார் இளங்கோவன். இளங்கோவனின் இந்தக் கோரிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1992ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி நடந்த கும்பகோணம் மகாமகம் புனித நீராடலின்போது மிகப் பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 60 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் நீராடிக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications