For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் தகனம்... ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழகத்தின் முதும்பெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 81. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயகாந்தன், நேற்றிரவு உயிரிழந்தார்.

ஜெயகாந்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

அரசியல் கட்சி தலைவர்கள், திரையலக பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஜெயகாந்தன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டாலின் – தொல்.திருமாவளவன்

ஸ்டாலின் – தொல்.திருமாவளவன்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ஜெயகாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜா – சிவகுமார்

பாரதிராஜா – சிவகுமார்

நடிகர் சிவகுமார், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் மறைந்த ஜெயகாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, ஊர்வலமாக உடல் பெசன்ட் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ரஷ்ய தூதர் செர்ஜி எல். கோடோவ்

ரஷ்ய தூதர் செர்ஜி எல். கோடோவ்

பழ.நெடுமாறன்,எழுத்தாளர் ராமகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, தென் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் செர்ஜி எல். கோடோவ், காங்கிரஸ் கட்சியின் போபன்னா உள்ளிட்ட பலர் இறுதி சடங்கில் பங்கேற்றனர். பின்னர் பெசன்ட் நகர் மின்மயானத்தில் ஜெயகாந்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

English summary
The famous writer Jayakanthan's body was taken to Besant Nagar crematory for funeral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X