For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

''கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மைய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சர்ச் வளாகத்தில் அமைந்துள்ள விடுதிக்குள் அடையாளம் தெரியாத நபர் வியாழக்கிழமை (12.6.2014) அதிகாலை அத்துமீறி நுழைந்து ஆறாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் இரு மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து, எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (12.6.2014) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Jayalalitha grand compensation of Rs 3 lakh to each rape survivor

இந்த ஆய்வுக் கூட்டத்தில் குற்றவாளியை உடனடியாக தேடிக் கண்டுபிடிப்பது குறித்தும், இது போன்ற சம்பவம் வருங்காலங்களில் நிகழாமல் தடுப்பது குறித்தும், மாணவியர் மற்றும் மகளிர் தங்கி உள்ள விடுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் போது, இந்த விடுதியில் மாணவர்கள் மற்றும் மாணவியர் அனைவரும் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டதும்; விடுதிக் காப்பாளர் விடுப்பில் சென்று இருப்பதும்; பொறுப்பில் உள்ள விடுதிக் காப்பாளர் விடுதியில் தங்கியிராமல், தனது இல்லத்தில் தங்கியிருந்ததும் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த குற்ற நிகழ்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவியர் மற்றும் பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த வழிகாட்டி நெறிகளை வகுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை உடனடியாக தேடிக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நான் காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பெற்றோர் / பாதுகாவலர் அனுமதியுடன் அவர்களை அரசு இல்லத்தில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த பாலியல் பலாத்கார நிகழ்வுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்வதோடு, எனது தலைமையிலான அரசு வகுத்துள்ள பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa expressed shock over the crime and sanctioned a solatium of Rs 3 lakh to each rape survivor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X