அம்மாவை விடு, கடைய தொடு: மதுரை ர.ரக்கள் கொதிப்பால் மைசூர் சில்க்ஸ் திறப்பு விழா கேன்சல்
மதுரை: அம்மா கர்நாடக சிறையில் இருக்கும்போது மைசூர் சில்க்ஸ் புடவை கடையை திறப்பதா என்று மதுரையில் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கியதால் கலெக்டர் கலந்துகொள்ள வேண்டிய விழாவே கேன்சல் ஆகியுள்ளது.
கர்நாடக அரசின் கழகங்களில் ஒன்று, 'கர்நாடக சில்க் இண்டஸ்ட்ரீஸ் கார்பொரேசன் லிமிட்டெட்' . எளிமையாக மைசூர் சில்க்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், நாட்டின் பல இடங்களிலும் மைசூர் சில்க்ஸ் தனது புதிய கிளைகளை தொடங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த 9ம் தேதி மதுரை கே.கே.நகரில் மைசூர் சில்க்ஸ் கிளை திறக்கப்படுவதாகவும், மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியம் கடையை திறந்து வைக்க உள்ளதாகவும் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. மேலும், கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி நீலா மஞ்சுநாத்தும் அதில் பங்கேற்பதாக இருந்தது.
இந்த தகவல் மதுரை மாவட்டத்து ரத்தத்தின் ரத்தங்களுக்கு பரவியதும் கடுமையாக கொந்தளித்தனர். கர்நாடகாவில் அம்மாவை சிறை வைத்துக்கொண்டு நம்ம ஊரில் வந்து கடையை திறக்கிறார்கள். அதையும் நமது கலெக்டர் திறந்து வைக்கிறார் என்றால் இது என்ன அநியாயம்? என்று தொண்டர்கள் தொடை தட்டினர்.
கட்சியின் உள்ளூர் பிரபலமான அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு இந்த தகவலை கொண்டு சென்றுள்ளனர். அவரும் கலெக்டரிடம் தொண்டர்களின் குமுறலை கூறியுள்ளார். இந்த தகவல் மைசூர் சில்க்ஸ் நிர்வாகிகளுக்கு சென்றது.
மைசூர் சில்க்ஸ் நிர்வாகிகள் மயக்கம் வராத குறையாம். இருந்தாலும், ஜெயலலிதா எப்போது தமிழகம் வருகிறாரோ அப்போது நாங்கள் கடையை திறந்துகொள்கிறோம் என்று கூறிவிட்டனராம். இதனால் விழா கேன்சல் ஆகிவிட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications