ஒரே நேரத்தில் மருத்துவமனையில் ஜெயலலிதா - கருணாநிதி.. கவலையில் தமிழகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்களான திமுக தலைவர் கருணாநிதியும், முதல்வர் ஜெயலலிதாவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்போது வருவார் என்பதே தெரியவில்லை. அதில் பல குழப்பங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

இந்த நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் முக்கியத் தலைவரான கருணாநிதி கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். தற்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு தலைவர்கள்

இரு தலைவர்கள்

தமிழக அரசியலைப் பொறுத்தவரை கருணாநிதியும், ஜெயலலிதாவும்தான் முக்கிய அச்சுக்கள். இவர்களைச் சுற்றித்தான் மொத்த அரசியலும் இருந்து வருகிறது.

அடுத்தடுத்து சுகவீனம்

அடுத்தடுத்து சுகவீனம்

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 23ம் தேதி இரவு உடல் நிலை பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதிக்கு ஒவ்வாமை

கருணாநிதிக்கு ஒவ்வாமை

இதேபோல திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக கடந்த அக்டோபர் 25ம் தேதி திமுக தரப்பில் அறிவிப்பு வெளியானது.

தொடர் சிகிச்சையில் ஜெ. கருணாநிதி

தொடர் சிகிச்சையில் ஜெ. கருணாநிதி

ஜெயலலிதாவும் தொடரந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். கருணாநிதியும் வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை போதாத நிலையில்தான் ஜெயலலிதாவும், தற்போது கருணாநிதியும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கவலையில் தமிழகம்

கவலையில் தமிழகம்

இப்படி இரு பெரும் அரசியல் தலைவர்களும் அடுத்தடுத்து சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்ற வேண்டுதலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As Chief Minister Jayalalitha and DMK president Karunanidhi are hospitalised, the people of Tamil Nadu and the political leaders are worried.
Please Wait while comments are loading...