For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல் கெளரவப் பிரச்சினை.. ஜெயிச்சே ஆகனும்... அமைச்சர்களுக்கு ஜெ. உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நடக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தல் நமக்கு கௌரவ பிரச்னை. சட்டசபைத் தேர்தலில் ஏமாந்த மாதிரி இதுலயும் ஏமாந்துவிடக் கூடாது. அரசின் திட்டங்கள் எல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அமைச்சரவை கூட்டம் என்ற தகவல் புதன்கிழமை காலையில்தான் அதிகாரபூர்வமாக எல்லா அமைச்சர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றிய விவாதத்திற்கான கூட்டம் என்று கூறப்பட்டாலும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துதான் இந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. கூட்டத்தில் பேசப்பட்ட விசயங்கள் என்ன என்பது பற்றி கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்ட தகவல்கள் காற்று வாக்கில் நம் காதில் வந்து விழுந்தன.

பட்ஜெட் விவாதம்

பட்ஜெட் விவாதம்

கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக சில விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாம் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களுக்கு ஆகும் செலவு எந்தவகையிலும் அரசுக்கு சுமையாகிவிடக் கூடாது. அந்தச் செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது பட்ஜெட்டில் தெளிவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்று அமைச்சர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறினாராம்.

திட்டங்களை நிறைவேற்றுங்கள்

திட்டங்களை நிறைவேற்றுங்கள்

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் நாம் வெல்ல வேண்டும். உங்கள் பகுதியில் என்ன திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறதோ அதையெல்லாம் உடனடியாக நிறைவேற்றுங்கள். அரசின் திட்டங்கள் எல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களுக்கு உத்தரவிட்டாராம்.

உள்ளாட்சித்துறையில் பணி

உள்ளாட்சித்துறையில் பணி

நாம் கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது தொடங்கப்பட்ட சில திட்டங்களும், சில பணிகளும் நிறைவடையாமல் பாதியில் இருக்கும். அந்தப் பணிகளை எல்லாம் உடனடியாக முடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் நாம் அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசினாராம் ஜெயலலிதா.

எனக்கு எல்லாம் தெரியும்

எனக்கு எல்லாம் தெரியும்

எல்லாம் பேசி முடிந்த பின்னர் இறுதியாக பஞ்ச் வைத்த முதல்வர், இங்கே இருப்பவர்களில் பலர் அமைச்சரவைக்கு புதியவர்கள். உங்களை நம்பித்தான் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது என நினைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறினாராம்.

புகார் மீது நடவடிக்கை

புகார் மீது நடவடிக்கை

சிலர்மீது தொடர்ந்து புகார்கள் வருகிறது. அதெல்லாம் உண்மை என்பது கண்டுபிடிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன். ஜாக்கிரதை என்றும் அமைச்சர்களை எச்சரித்தாராம் முதல்வர். முதல்வரின் எச்சரிக்கையால் பல அமைச்சர்கள் பயத்திலும் பீதியிலும்தான் இருக்கிறார்களாம்.

எஸ்.பி. வேலுமணி

எஸ்.பி. வேலுமணி

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் வேலுமணியை அழைத்துப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. நடக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தல் நமக்கு கௌரவ பிரச்னை. சட்டசபைத் தேர்தலில் ஏமாந்த மாதிரி இதுலயும் ஏமாந்துவிடக் கூடாது என்று கூறினாராம்.

தீவிர கவனம் தேவை

தீவிர கவனம் தேவை

சட்டசபைத் தேர்தலைவிட நாம் இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை, ஒவ்வொருவரும் தனிப்பட்ட செல்வாக்குடன் இருப்பார்கள். அதையும் தாண்டிதான் நாம் ஜெயிக்க வேண்டும். இதில் உங்களுக்குத்தான் அதிகம் வேலை இருக்கும் என்று வேலுமணியிடம் கூறினாராம் முதல்வர்.

அதிருப்தியாளர்களுக்கு நோ சீட்

அதிருப்தியாளர்களுக்கு நோ சீட்

தமிழ்நாடு முழுக்க எந்த ஊரில் எந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமோ அதை உடனே செய்யுங்க. எந்த ஊருக்கு என்ன தேவை என்பதை உடனடியாக விசாரிங்க. கடந்த முறை பதவியில் இருந்தவர்களில் யார் யாரெல்லாம் மக்களிடம் அதிருப்திக்குள்ளாகி இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மறுபடியும் சீட் கொடுக்க முடியாது.

நேர்காணல் நடத்தலாம்

நேர்காணல் நடத்தலாம்

வேட்பாளர்களை தேர்வுசெய்வதிலும் நாம் அதிக கவனம் செலுத்தியாகணும். மாநாராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன் தேவைப்பட்டால் நானே அவர்களிடம் நேர்காணல் நடத்துறேன் என்று கூறியிருக்கிறாம் ஜெயலலிதா.

ஆளுங்கட்சி - எதிர்கட்சி

ஆளுங்கட்சி - எதிர்கட்சி

உள்ளாட்சித்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அதீத கவனம் செலுத்தி வருவதால் அமைச்சர்களும் இலவச திட்டங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதில் தீவிரமாக இருக்கிறாராம். சட்டசபைத் தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தலில்தான் ஆளுங்கட்சி எதிர்கட்சிக்கு இடையே மல்லுக்கட்டு அதிகமாக இருக்கும் என்பதால் இப்போதிருந்தே பரபரப்பும் எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கிவிட்டது.

English summary
Tamilnadu Chief Minister J.Jayalalitha met with Ministers discuss about local body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X