For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலுக்கு அழைக்கும் தொண்டர்களிடம் கருத்து கேட்கிறார் தீபா.. பக்காவாக ரெடியாகிறார்!

என்னை எதற்காக அரசியலுக்கு அழைக்கிறீர்கள், ஏன் அதிமுகவின் புதிய தலைமையை எதிர்க்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்டு அதிமுக தொண்டர்கள் மன ஓட்டத்தை தீபா கணித்து வருகிறார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றுள்ளார். ஆனால், சசிகலா தலைமையை அதிமுகவின் பல லட்சம் தொண்டர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது. சசிகலாவுக்கு மாற்றாக தொண்டர்கள் ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை கட்சியின் தலைமை பதவி வகிக்க அழைக்கிறார்கள்.

சென்னை தி.நகரில் உள்ள சிவஞானம் சாலையிலுள்ள தீபா வீட்டுக்கு தினமும் அதிமுக தொண்டர்கள் வந்து தீபாவை அரசியலுக்கு அழைக்கிறார்கள். இன்றும் தீபா வீட்டு முன்பு அதிமுக தொண்டர்கள் பெருமளவுக்கு குவிந்தனர்.

Jayalalitha niece Deepa gets opinions from AIADMK party men

ஆனால், பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து பத்திரிகையாளராக பணியாற்றியுள்ள தீபா அறிவுப்பூர்வமாக அடித்த அடியை எடுத்து வைக்க நினைக்கிறார். எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசியலில் குதிக்க தீபா விரும்பலில்லை.

தனக்கு உண்மையிலேயே ஆதரவு உள்ளதா, வீட்டு முன்பு வந்து உருகும் தொண்டர்களை நம்பி களமிறங்க முடியுமா என்பது குறித்து புள்ளி விவர கணக்குகளை அவர் எடுத்து வருகிறாராம். இதற்காக தீபா வீட்டில் பதிவேடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் தொண்டர்களின் ஊர், பெயர் விவரங்கள் அதில் குறிக்கப்படுகிறது.

சென்னையில் மட்டும்தானா அல்லது வேறு எந்தெந்த மாவட்டங்கள் வரையில் தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள தீபா ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அவர் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறார். ஜெயலலிதா இறந்து 30 நாட்கள் வரையில் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்க கூடாது என பொறுமை காத்த தீபா இனிமேல் வேகம் காட்டுவார் என கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று அவரது இல்லம் வந்திருந்த தொண்டர்களில் சிலரிடம் தனியாக அழைத்து கருத்து கேட்டுள்ளார். இனியும் தொடர்ந்து இதுபோல கருத்து கேட்பார் என தெரிகிறது. என்னை எதற்காக அரசியலுக்கு அழைக்கிறீர்கள், ஏன் அதிமுகவின் புதிய தலைமையை எதிர்க்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்டு அதிமுக தொண்டர்கள் மன ஓட்டத்தை தீபா கணித்து வருகிறார்.

தீபாவுக்கு சுமார் 25 லட்சம் அதிமுக தொண்டர்கள் ஆதரவு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதி செய்வதில் தீபா முனைப்பு காட்டுகிறார். ஆழம் தெரியாமல் காலை விட்டு அவமானப்படக்கூடாது என்பதில் தீபா ஜாக்கிரதையாக உள்ளார்.

English summary
Jayalalitha niece Deepa gets opinions from AIADMK men as they want she should enter the politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X