For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ., அறைக்கு தினமும் சென்ற சசிகலா... லண்டன் செல்ல மறுத்த ஜெ.,- டாக்டர் பாலாஜியின் சாட்சியம்

சிகிச்சைக்காக லண்டன் வருமாறு அழைத்தும் ஜெயலலிதா லண்டன் செல்ல மறுத்துவிட்டதாக டாக்டர் பாலாஜி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ., அறைக்கு தினமும் சென்ற சசிகலா... லண்டன் செல்ல மறுத்த ஜெ.,- டாக்டர் பாலாஜியின் சாட்சியம்- வீடியோ

    சென்னை: அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் தினமும் போய் பார்த்தேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான டாக்டர் பாலாஜி கூறியுள்ளார்.

    தான் தமிழக அரசு மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், சிகிச்சைக்கு வந்த லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்து சென்றதாக கூறினார்.

    தினமும் ஜெயலலிதா அறைக்கு சசிகலா மட்டும் தான் செல்வார். எழுந்தவுடனேயே அவர் சசிகலாவை தான் அழைப்பார் என்றும் பாலாஜி கூறியுள்ளார்.

    அரசு மருத்துவர்கள் குழு

    அரசு மருத்துவர்கள் குழு

    கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவருக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சார்பில் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த டாக்டர்கள் குழுவிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். அரசு சார்பில் இடம்பெற்றிருந்த சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர் விமலா, அரசு மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ ஆகியோர் இதுவரை விளக்கமளித்துள்ளனர்.

    டாக்டர்கள் அளித்த பதில்

    டாக்டர்கள் அளித்த பதில்

    இதுவரை ஆஜரான டாக்டர்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என்றே தெரிவித்தனர்.
    அவர்களுக்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவு அருகே ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர். அந்த அறையில் தான் அமர்ந்து இருந்தோம் என்றும், அந்த அறையில் ஒரு தொலைக்காட்சி கூட கிடையாது என்று விசாரணையில் கூறினர். ஒரு நாள் ஜெயலலிதாவுக்கு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து செல்லும் போது கூட ஸ்கிரீன் போட்டு மூடியே ஸ்டெக்சரில் கொண்டு சென்றனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சசிகலா உடன் இருந்தார்

    சசிகலா உடன் இருந்தார்

    டாக்டர் பாலாஜி நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தானும், சசிகலாவும் தினசரியும் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார். அவர் ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கும் போது சுயநினைவுடன் இருந்ததாகவும், சசிகலா உடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
    தான் தமிழக அரசு மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், சிகிச்சைக்கு வந்த லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்து சென்றதாக கூறினார். ஜெயலலிதாவை நான் தினமும் போய் பார்த்தேன் என்றும் கூறியுள்ளாார்.

    லண்டன் செல்ல மறுத்த ஜெயலலிதா

    லண்டன் செல்ல மறுத்த ஜெயலலிதா

    லண்டன் டாக்டர் சிகிச்சை அளிக்க வந்திருந்தார். அப்போது, அவர் ஜெயலலிதாவிடம் சிகிச்சைக்கு லண்டன் வருமாறு அழைத்ததாகவும், அங்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து அனுப்பி வைப்பதாகவும் கூறினார். ஆனால், ஜெயலலிதா லண்டன் வர மறுத்துவிட்டதாக பாலாஜி தெரிவித்தார்.

    டிசம்பர் 2 வரை மட்டுமே சிகிச்சை

    டிசம்பர் 2 வரை மட்டுமே சிகிச்சை

    தினமும் ஜெயலலிதா அறைக்கு சசிகலா மட்டும் தான் செல்வார். எழுந்தவுடனேயே அவர் சசிகலாவை தான் அழைப்பார் என்றும் பாலாஜி தெரிவித்தார். டிசம்பர் 2ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுவரை தான் எனக்கு தெரியும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் பாலாஜி மீண்டும் 27ஆம் தேதியன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்றொரு அரசு மருத்துவரான தர்மராஜனும் விசாரணை கமிஷன் முன்பு விளக்கமளித்தார்.

    English summary
    Tamil Nadu CM was improving just before her death. Sasikala went to Jayalalithaa's room daily. Dr Balaji details behind Arumugasamy CommissionJayalalithaa's medical condition improved on December 2.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X