ஜெ.வின் கொடநாடு பங்களாவை வீடியோ எடுத்த மர்ம நபரால் பரபரப்பு- போலீஸ் 'வலை'
ஜெயலலிதாவின் கொடுநாடு எஸ்டேட் பங்களாவை மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவை வீடியோ எடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவை சுற்றி கடந்த சில வாரங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. அந்த பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவரை கடந்த ஏபரல் 24ஆம் தேதி சிலர் தாக்கி கொலை செய்தனர். கிருஷ்ண பகதூர் என்கிற மற்றொரு காவலாளியை தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்தக் கொலையை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், ஜெ.யின் முன்னாள் கார் ஓட்டுநர். இவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

சயான்
அவருடைய கூட்டாளியான சயான் விபத்தில் சிக்கி, கோவை தனியார் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறார்.

குட்டி
அவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய மற்றொரு கூடாளியான குட்டி தலைமறைவாகியுள்ளார். அவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஐடி ரெய்டு வதந்தி
இந்நிலையில் நேற்று கொடநாடு பங்களாவில் வரிமான வரித்துறை சோதனை மேற்கொள்கின்றனர் என தகவல் வந்தது. ஆனால் அங்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பங்களாவைச் சுற்றிப் பார்க்க வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பி சென்றனர். எனவே வருமான வரித்துறை சோதனை என்பது வதந்தி என தகவல் வெளியானது. இப்படி அந்த பங்களாவைச் சுற்றி சில நாட்களாக நடப்பவை திகில்படங்களாகவே இருக்கின்றன.

வீடியோ எடுத்த மர்ம நபர்
இந்நிலையில் கொடநாடு பங்களாவை ஒரு மர்மநபர் ஒருவர் வீடியோ படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதையடுத்து போலீசார் வீடியோ எடுத்தவரை தேடி வருகின்றனர். கொடநாடு பங்களாவில் எங்கு, என்ன பொருட்கள் ஆவணங்கள் இருக்கின்றன என்பது மறைந்த ஜெயலலிதாவுக்கும் சிறையில் இருக்கும்சசிகலாவுக்கும் மட்டுமே தெரியும் என்கிற நிலையில் கொடநாடு பங்களாவை சுற்றி ஏன் இத்தனை மர்மங்களும் சர்ச்சைகளும் நடக்கின்றன என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications