For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் பரிசு திட்டம்: முதல்வர் ஜெ. துவக்கி வைத்தார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நீலகிரி: பொங்கல் திருநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்கும் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கிவைத்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னுனூர் தூய வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.

Jayalalithaa launches dhoti, sari distribution

அப்போது அவர், தனது அரசு மக்களுக்காக செயல்பட்டு வருவதாகவும், மக்கள் தனக்கு துணை இருப்பதாகவும்,மக்களின் பேராதரவோடு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என்றார். விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள்களையும் வழங்கினார்

பொங்கல் பரிசு

பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், ரொக்கமாக 100 ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

விழாவில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விழாவை முன்னிட்டு குன்னூர் பகுதியில் முதல்வரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

English summary
Chief Minister Jayalalithaa on Saturday launched the distribution of dhotis and saris to the poor by presenting the clothes at a function held at St.Valanar Boys Higher Secondary School at Coonoor in Nilgiris district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X