For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழக்கமான சிகிச்சை தொடருகிறது.. ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம்: அப்பல்லோ அறிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்று காரணம் கூறி தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.

இரண்டாவது அறிக்கையில், அவர் நல்ல உணவு உட்கொள்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அறிக்கையளிக்கப்பட்டது. அதேநேரம், ஜெயலலிதா சில தினங்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார். அதன்பிறகு அலுவல்களை பார்க்க முடியும் என்று அப்பல்லோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

Jayalalithaa’s health continues to improve, says Apollo Hospital

அப்பல்லோ அளித்த மூன்றாவது மருத்துவ அறிக்கையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். ஜெயலலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றுக்கு ரிச்சர்ட் சொன்ன அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், மூன்றாவது அறிக்கையை காட்டிலும் அதிக மருத்துவ குறிப்புகள் அடங்கிய நான்காவது அறிக்கையை அப்பல்லோ நேற்று இரவு வெளியிட்டது. அதில் ஜெயலலிதா, செயற்கை சுவாச சப்போர்ட்டுடன் சிகிச்சை பெற்றுவருவதாக முதல் முறையாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 5வது அறிக்கையை இன்று மாலை வெளியிட்டது அப்பல்லோ. அதில் முதல்வர் உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், வழக்கமான சிகிச்சைகள் தொடருவதாகவும், டாக்டர்கள் குழுவால் முதல்வர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Days after Chief Minister J Jayalalithaa was admitted to Apollo Hospital in Chennai for fever and dehydration, the hospital said on Tuesday that her health continues to improve.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X