For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா இஸ் ஆல்ரைட்... விரைவில் வீடு திரும்புவார்

ஜெயலலிதா உடல் நலம் குறித்து தினசரி செய்தித் தொடர்பாளர்களும், மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருபவர்களும் செய்தியாளர்களிடம் கூறும் தகவல் அம்மா நலம் என்பதுதான்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : கடந்த 58 நாட்களாக என்னதான் நடக்கிறது அப்பல்லோவில் என்பதுதான் அதிமுக தொண்டர்கள், தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி உடல்நல குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். மறுநாளில் இருந்து இன்றைய தினம் வரை அம்மா நலம்... பூரண ஓய்வில் இருக்கிறார்... விரைவில் வீடு திரும்புவார் என்பதே செய்தித் தொடர்பாளர்கள் அளிக்கும் தகவலாக இருக்கிறது.

ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவினருடன், லண்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பிசியோதெரபி நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டி தொண்டர்கள் தமிழகம் முழுவதும் விஷேச பூஜைகள் நடத்தி வருகின்றனர். காளி பகவதி அம்மனுக்கு 108 தேங்காய்களில் நெய்தீபம் ஏற்றி அதிமுகவினர் வழிபடுகின்றனர். அவர் வழக்கமான உணவுகளை சாப்பிடுவதாகவும், செயற்கை சுவாசம் இல்லாமல் நன்றாக சுவாசிப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த 57 நாட்களாக செய்தி தொடர்பாளர்களும், டாக்டர்களும் சொன்ன தகவல்களை தொகுத்து அளித்துள்ளோம்.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

சந்திரபிம்பம் வளருவது போல ஜெயலலிதா உடல்நிலை தேறிவருகிறது என கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவின் கண்காணிப்பில் தமிழகம் இருக்கிறது என்றும் கூறி தொண்டர்களை கொதிப்படைய வைத்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் 'அம்மா ஈஸ் ஆல் ரைட்' என்று டாக்டர்கள் கூறியதாக தெரிவித்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்

பண்ருட்டி ராமச்சந்திரன்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவ்வப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், மதுசூதனன் ஆகியோர் சென்று நலம் விசாரித்து வருவார்கள். அம்மா குணமடைந்து விட்டார். இப்போது ஓய்வில் இருக்கிறார் என்று சொல்லி வந்தனர்.

சி.ஆர். சரஸ்வதி

சி.ஆர். சரஸ்வதி

ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தினசரி ஏதாவது ஒரு தகவலை செய்தியாளர்களிடம் கூறுவார். செப்டம்பர் 23ம் தேதி அம்மாவுக்கு எதுவும் இல்லை சீக்கிரம் வீட்டுக்கு வருவாங்க என்று சொன்னதில் இருந்து, அம்மா நல்லா இருக்காங்கன்னு டாக்டர் சொல்லிட்டாங்க...எங்க சந்தோசத்துக்கு அளவே இல்லை என்று நேற்று சொன்னது வரை சி.ஆர். சரஸ்வதியின் பேட்டிகள் பிரபலம். அம்மா நலம் விரைவில் மக்கள் பணியாற்றுவார்கள் என்று மகிழ்ச்சி பொங்க கூறி வருகிறார் சி.ஆர். சரஸ்வதி.

சி. பொன்னையன்

சி. பொன்னையன்

தினசரியும் அப்பல்லோவிற்கு வந்து இதே சூட்டோடு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார் பொன்னையன். இரு தினங்களுக்கு முன்னர், முதல்வர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை அளப்பரிய மகிழ்ச்சி அலையை உருவாக்கி உள்ளதை தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது என்றார் பொன்னையன். முதல்வர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். இந்த தகவலை அப்பல்லோ மருத்துவக்குழு டாக்டர் குழு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர். உலகளவில் மிகச்சிறந்த சிகிச்சையை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்களும் அவருக்கு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக அவர் பரிபூரண உடல்நலம் பெற்றுள்ளார் என்றும் பொன்னையன் தெரிவித்தார்.

விரைவில் வீடு திரும்புவார்

விரைவில் வீடு திரும்புவார்

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று டாக்டர் ரிச்சர்ட் பீலேவை சந்தித்து பேசிய பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் லண்டனைச் சேர்ந்த தமிழரசன். லண்டன் டாக்டரே கூறிவிட்டார். அம்மா பூரண நலமடைந்து விட்டார் என்று செய்தியாளர்களிடம் மகிழ்ச்சி பொங்க கூறினார் சி.ஆர். சரஸ்வதி.

தொலைபேசியில் பேச்சு

தொலைபேசியில் பேச்சு

விசாலாட்சி நெடுஞ்செழியன் மகன் மதிவானன், செய்தியாளர்களிடம் பேசிய போது, தனது தாயின் மரணம் குறித்து ஜெயலலிதா டெலிபோனின் பேசி துக்கம் விசாரித்ததாக கூறினார். அதே போல ஜெயலலிதா தினசரி பேப்பர் படித்து தமிழக அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறார் என்று நவம்பர் 17ம் தேதி சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

பிரதாப் சி. ரெட்டி

பிரதாப் சி. ரெட்டி

என்னதான் செய்தி தொடர்பாளர்கள் அவ்வப்போது அம்மா நலம் என்று கூறினாலும் ஜெயலலிதாவை தினசரியும் சந்திக்கும் மருத்துவர் கூறினால்தான் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது. கடந்த இரண்டு வார காலமாகவே பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா உடல் நலம் குறித்து செய்தியாளர்கள் மூலமாக மக்களிடம் பேசி வருகிறார். ஜெயலலிதா நலம் என்றும் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். இன்று பேசிய அவர்,
ஜெயலலிதாவுக்கு அவ்வப்போதுதான் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தேவைப்படும்போது சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்படுவார். எங்கள் மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவை நன்றாக கவனித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

காத்திருக்கும் தொண்டர்கள்

காத்திருக்கும் தொண்டர்கள்

ஜெயலலிதாவைப் பற்றியும், அவரது உடல் நலம் பற்றியும் கடந்த ஒரு மாதகாலமாக எந்த வதந்தியும் பரவவில்லை. காரணம் பிரதாப் ரெட்டியின் வார்த்தைகளின் மீதான நம்பிக்கைதான். செய்தி தொடர்பாளர்கள் யாரும் மருத்துவமனையின் முதல் தளத்தை தாண்டுவதில்லை. இரண்டாவது தளம் வரை ஓபிஎஸ், தம்பித்துரை, டாக்டர் விஜயபாஸ்கர் மட்டுமே செல்கின்றனர். ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் பிராத்தனையாக உள்ளது.

English summary
Since September when the Tamil Nadu Chief Minister was admitted for infection and fever the AIADMK has been in a rut. Here is what spokespersons of AIADMK have said for about a month now. Only needs rest', 'perfectly fine', 'infection is totally under control', 'has recovered fully', ask any AIADMK leader about J Jayalalithaa's health and this is all you will hear, albeit paraphrashed each time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X