For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளில் (பிப்-24) அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.கவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலுக்கு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளும் அதிமுக, சட்டசபை தேர்தலுக்கான விருப்பமனுவை கடந்த ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6 வரை பெற்றுள்ளது. 234 தொகுதிகளில் போட்டியிட 26,174 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இதில் ஜெயலலிதா தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 7,936 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளா தினமான பிப்ரவரி 24ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

ஆளும் அ.தி.மு.க.,வில், 28 அமைச்சர்களும், 51 மாவட்ட செயலர்களும் உள்ளனர். இவர்களில், யார் யாருக்கெல்லாம், 'சீட்' கிடைக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. மகளிர் அணி, இலக்கிய அணி, ஐ.டி அணி, மாணவர் அணி, வழக்கறிஞர்கள் அணி என அணி அணியாக பிரச்சாரங்களைத் தொடங்கிவிட்டனர்.

பிறந்தநாளில் பட்டியல்

பிறந்தநாளில் பட்டியல்

கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போது, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே தனது 66வது பிறந்தநாளில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதேபோல இந்த முறை தனது 68வது பிறந்தநாளில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட பட்டியல்

முதற்கட்ட பட்டியல்

அந்தப் பட்டியலில் 52 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கலாம் என்றும் இவர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று மட்டும் விருப்பமனுத் தாக்கல் செய்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு வாய்ப்பு

பெண்களுக்கு வாய்ப்பு

இந்த முறை 30 முதல் 40 சதவிகிதம் பெண் வேட்பாளர்கள் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

234 தொகுதிகளிலும் வெற்றி இலக்கு என்று அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது. எனவேதான் இதுவரைக்கும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? தனித்து போட்டியிடுவதா என்று ஜெயலலிதா அறிவிக்கவில்லை.

அதிமுகவின் வாக்கு வங்கி

அதிமுகவின் வாக்கு வங்கி

1991ல் அதிமுக 44.4% வாக்குகளைப் பெற்றிருந்தது. 1996 தேர்தலில் கடுமையான எதிர்ப்பலை உருவாகியிருந்த சூழலில், திமுக - தமாகா கூட்டணி வென்றது. இத்தேர் தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 27.08% ஆகக் குறைந்தது. 2001-ல் மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்த போது, அதிமுக 31.4% வாக்குகளைப் பெற்றிருந்தது.

2011ல் வெற்றி

2011ல் வெற்றி

2006 தேர்தலில் திமுகவிடம் தோற்றபோதும், முந்தைய தேர்தலைவிட அக்கட்சிக்கு 1.2% வாக்குகள் அதிகம் கிடைத்திருந்தன - 32.6% வாக்குகளை வாங்கியிருந்தது. 2011 தேர்தலில் அதிமுக 38.4% வாக்குகள் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

வேட்பாளர்கள் பட்டியல்

வேட்பாளர்கள் பட்டியல்

கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அதிமுக போட்டியிட்டது. 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டு 150 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

லோக்சபா தேர்தலில்

லோக்சபா தேர்தலில்

2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வென்றபோது அதன் வாக்கு வங்கி, 44.3% ஆக உயர்ந்திருந்தது. மறுபுறம், 23.6% வாக்குகளையே திமுக வாங்கியிருந்தது எனவேதான் இம்முறையும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடலாமா என்று ஜெயலலிதா யோசித்து வருவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிகவின் அறிவிப்பு

தேமுதிகவின் அறிவிப்பு

தேமுதிகவின் கூட்டணி அறிவிப்புக்கு பிறகே ஜெயலலிதா தனது அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அதுவரை ஜெயலலிதா மவுனம் சாதிப்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.

English summary
Tamil Nadu Chief Minister and AIADMK general secretary Jayalalithaa will announce candidates for assembly election constituencies in Tamil Nadu and Puducherry.Jayalalithaa, will celebrate her 68th birthday, on February 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X