சேலம் அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து: ஆத்தூர் நீதிபதி பரிதாப பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி தேவி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் நாகலட்சுமி தேவி. இவர் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் இருந்து ஆத்தூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை நீதிபதியின் கணவர் குமார்ராஜ் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

Judge from attur killed in accident

இந்நிலையில் மல்லியக்கரை அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை மீறி பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீதிபதி நாகலட்சுமி தேவி பலியானார். விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Judge Nagalakshmi devi from attur killed in accident near salem.
Please Wait while comments are loading...