ஜூலி வெளியேற வேண்டும்... பிக்பாஸ் குடும்பத்தினர் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டை விட்டு ஜூலி வெளியேற வேண்டும் என்று பிக்பாஸ் குடும்பத்தினர் ஒன்று கூடி முடிவு செய்தது போன்ற ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.

அழுகாச்சி சீரியல்களை காட்டிலும் மிகவும் பிரபலமடைந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். இதற்கு முதலில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியானாவுக்காக பார்க்கப்பட்டது என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் தற்போது பொய் கூறி வருவதாலும், அவரது செயல்பாடுகள் மக்களுக்கு பிடிக்காததாலும் அவரை நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர். இதனால் நேர்மையாக உள்ள ஓவியாவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

ஓவியாவை துரத்த திட்டம்

ஓவியாவை துரத்த திட்டம்

காயத்ரி, நமீதா, ஜூலி ஆகியோர் மக்களின் செல்வாக்கை பெற்றுள்ள ஓவியாவை பிக்பாஸ் வீட்டில் இருந்து துரத்த பல்வேறு முயற்சிகளை செய்தனர். ஆனால் ஓவியாவுக்கு எதிரான சதியை தெரிந்து கொண்ட மக்கள் அவருக்கு ஓட்டுகளை அள்ளி கொடுத்து வருகின்றனர்.

நல்லவராக மாறிய காயத்ரி

நல்லவராக மாறிய காயத்ரி

இந்நிலையில் காயத்ரியும் இந்த வீட்டில் நல்லவர் போல் காட்டுகிறார்கள். ஓவியாவை அணைத்துக் கொண்டு காயத்ரி ஆறுதல் கூறுகிறார். தன்னுடன் இருந்த ஆர்த்தி, நமீதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுவிட்டதால் தற்போது தனிமரமாக உள்ள காயத்ரிக்கு ஜூலி, சக்தி, சினேகன் உள்ளிட்டோரே ஆதரவு.

ஓவியாவை பகைத்துக் கொள்ள...

ஓவியாவை பகைத்துக் கொள்ள...

மக்கள் செல்வாக்கு உள்ள ஓவியாவை பகைத்துக் கொள்ளாமல் ஜூலியை வெளியேற்ற காயத்ரி முடிவு செய்துவிட்டார் போலும். அதன் எதிரொலியாக ஓவியாவை புகழ்ந்து பேசி வருகிறார். ஓவியா முன்பிருந்ததற்கு தற்போது மிகவும் மாறிவிட்டார் என்று பூரிப்படைகிறார்.

மகிழ்ச்சி அளிக்கும் ப்ரோமோ

இன்று பிக்பாஸ் விஜய்டிவி வெளியிட்டுள்ள ப்ரோமோவில் இந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்போவது யார் என்பதை மற்ற போட்டியாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார். அதற்கு காயத்ரி உள்ளிட்டோர் ஒன்று கூடி ஜூலி என்கின்றனர். எனவே ஜூலியை வெளியேற்ற போவதை நினைத்து பொதுமக்களும் ஓவியா ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே இன்றைய நிகழ்ச்சியை அனைவரும் தவறாமல் பார்ப்பவர் என்றே தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Biggboss Promo reveals that all the contestants of Bigg boss house are decided to evict Juliana from that house.
Please Wait while comments are loading...