புத்தர் முகம் பதித்த உடையை அணிந்து ஆபாச நடனம் ஆடிய ஜூலி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புத்தர் முகம் பதித்த உடையை அணிந்து ஜூலி ஆபாச நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புத்தர் முகம் பதித்த உடையை அணிந்து ஜூலி ஆபாச நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலியும் பங்கேற்றுள்ளார். ஆனால் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் குறித்து தரகிகுறைவாக பேசிவரும் ஜூலி, மனதில் தோன்றுவதையெல்லாம் மற்றவர் கூறியதாக கூறி பொய் மூட்டையையும் அவிழ்த்துவிட்டு வருகிறார்.

ஜூலியை வெளியேற்ற வேண்டும்
அவரின் நடவடிக்கைகள் தமிழக ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜூலியை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

ஓவியா மேல் பொறாமை
ஜூலியின் உண்மை முகத்தை கமல் தோலுரித்து போதிலும் திருந்தாமல் எல்லா விஷயத்திலும் எக்ஸ்ட்ரா மசாலாவை போட்டே மற்றவர்களிடம் பற்ற வைத்து வருகிறார். குறிப்பாக ஓவியா மேல் பெரும் பொறாமையில் உள்ள ஜூலி அவரை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளார்.

புத்தர் படத்துடன் ஆபாசநடனம்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பாட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் குத்துப்பாடலுக்கு ஜூலி மிக ஆபாசமாக நடனம் ஆடினார். அப்போது அவர் அணிந்திருந்த உடையில் புத்தரின் படம் பதியப்பட்டிருந்தது.

ஜூலி உடையால் சர்ச்சை
புத்தரின் படம் பதியப்பட்ட ஆடையை அணிந்து அவர் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கவுதம புத்தரை அவமதிக்கும் செயல் என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
புத்தரை அவமதிக்கும் செயல்
உலகம் முழுக்க பார்க்கும் நிகழ்ச்சியில் புத்தர் முகம் பதித்த மேலாடை அணிந்து ஜூலி ஆபாச நடனம். கௌதம புத்தரை அவமதிக்கும் செயல்.
|
புத்தர் உடையில் ஆபாசநடனம்
புத்தர் உடை அணிந்து ஆபாச நடனம்... என்கிறது இந்த டிவிட்
|
வழக்கு தொடரனும்
கோவில்ல இருக்க வேண்டிய புத்தர ஜூலி டிரஸ்ல நிறுத்தி வச்சிருக்கு. இது சம்மந்தமா வழக்கு தொடரனும் என்கிறார் இந்த நெட்டிசன்
|
ஜூலி மன்னிப்பு கேட்க வேண்டும்
புனித குருவான அவரை இழிவு படுத்திய செயலுக்கு.விஜய் டிவி மற்றும் ஜூலி மன்னிப்பு கோர வேண்டும் என்கிறது இந்த டிவிட்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications