பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போகிறாராம் ஜூலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ஜூலி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றார்.

வந்த முதல் நாளே என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை எனக் கூறி நடிகர் ஸ்ரீயின் பரிதாபத்தை பெற முயன்றார். அது முடியாமல் போனதால் அடிக்கடி கேமராவின் முன்பு கண்ணீர் விட்டு கதறி மக்களின் அனுதாபங்களை பெற முயன்றார்.

ஜூலியின் சுயரூபம்

ஜூலியின் சுயரூபம்

ஒரு கட்டத்துக்குப் பின் அவர் செய்வது எல்லாமே நாடகம் என தெரியவந்தது. மேலும் ஜூலி இடத்திற்கு ஏற்றார் போல் எப்படி வேண்டுமானலும் யாரிடம் வேண்டுமானலும் நடிப்பார் மாற்றி பேசுவார் என்ற அவரது சுயரூபம் தெரியவந்ததால் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வீடியோவை காணோம்

வீடியோவை காணோம்

அண்மையில் ஓவியாவை வைத்து அவர் போட்ட டிராமாவை நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் போட்டுக்காட்டினார். ஆனால் அவை எல்லாமே பொய் என்று கூறிய ஜூலி அந்த சம்பவத்துக்கு முன்பு நடந்த வீடியோ காட்ட வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறினார்.

ஒத்துஊதும் காயத்ரி

ஒத்துஊதும் காயத்ரி

அதுபோன்ற காட்சிகள் எந்த கேமராவிலும் படம்பிடிக்கவில்லை என நடிகர் கமல் கூறியும் அதனை ஜூலி ஒத்துக்கொள்ளவில்லை. இதற்கு காயத்ரியும் ஒத்து ஊதி வருகிறார்.

தலைவராக ஆசைப்படும் ஜூலி

தலைவராக ஆசைப்படும் ஜூலி

ஜூலியின் குட்டு உடைந்ததால் காயத்ரி ஷக்தியை தவிர பிக்பாஸ் குடும்பத்தினர் அவரிடம் விலகியே உள்ளனர். இந்நிலையில் இன்று ஒளிபரப்படும் புரமோவில் சினேகனிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கும் ஜூலி, அடுத்த வாரம் பிக்பாஸ் குடும்பத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.

அது தன்னுடைய கேரக்டர் இல்லை

அது தன்னுடைய கேரக்டர் இல்லை

மேலும் இங்கு வந்தது முதல் தான் அழுது கொண்டேயிருப்பதாகவும் இனி வரும் நாட்களில் அது தன்னுடைய கேரக்டர் இல்லை என்றும் எரிச்சலூட்டும் சிரிப்புடன் கூறுகிறார். இதனை சினேகன் தனக்கே உரிய பாணியில் பார்க்கிறார்.

Bigg Boss Tamil - Actor Jeeva comments on bigboss contestants-Filmibeat Tamil
தற்போதைய தலைவர் சினேகன்

தற்போதைய தலைவர் சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் தலைவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். தற்போது தலைவராக சினேகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Julie plans to contest for the leader of Biggboss house. She wants to be a leader of biggboss house. Julie telling this to Snehan. She is telling that always crying is not my character.
Please Wait while comments are loading...