For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தலைமுறை அலுவலக தாக்குதல் கருத்து சுதந்திரத்தின் மீதான போர்: கி. வீரமணி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீதான தாக்குதல் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட போர் என தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘தாலி'பற்றிய விவாதம் ஒன்றினை ‘புதிய தலைமுறை' தொலைக்காட்சி சில நாள்களுக்குமுன் ஏற்பாடு செய்ததை, மிரட்டி நடக்கவிடாமல் செய்ய, அந்த ஊடகவியலாளர்களான ‘கேமிராமேன்' மற்றும் சில ஊழியர்களைப் பின்புறத்தில் சென்று தாக்கி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, கருத்துச் சுதந்திரத்தை எதிர்த்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள்ளனர்; அதுவும் மோடி அரசு மத்தியில் வந்ததையொட்டி தங்கு தடையின்றி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் வன்முறைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. அவ்வமைப்புகளின் தலைவர்கள் வன்முறையை நியாயப்படுத்துவது போன்ற அறிக்கைகள் வாயிலாக அச்செயல்களைத் தூண்டுவதும் வெளிப்படையாகிவிட்டது.

K. Veeramani condemns attack on Puthiya Thalaimurai TV office

தாலி அணிதல் என்பது ஒரு மதத்தின் கலாச்சாரம் என்று கூட எவராலும் வாதிட முடியாது; காரணம், மதுரை, தேனி போன்ற சில மாவட்டங்களில் மற்றும் பல பகுதிகளில் தாலி கட்டாத வைதிக திருமணங்களே பலவும் வழமையாக நடைபெற்று வருவது கண்கூடு.

இதை ஒரு விவாதத்திலேயே கொண்டு வரக் கூடாது என்பதற்காக அத்தகைய தொலைக்காட்சி ஊடக ஊழியர்களைத் தாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. இது அச்சுறுத்திப் பணிய வைக்கும் பாசிச அணுகுமுறையாகும்.

இது குறித்து நாம் சில நாள்களுக்கு முன் (9.3.2015) அறிக்கையும் விடுத்தோம்.

இன்று (12.3.2015) காலை அதே அலுவலகம் (‘புதிய தலைமுறை') முன்பு இரண்டு ‘டிபன்பாக்ஸ்' குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதானது - மிகமிக வேதனைக்கும், வெட்கத்திற்கும், வன்மையான கண்டனத்திற்கும் உரிய நடத்தை கெட்ட செயல் அல்லவா? அந்த அலுவலகத்திற்கு முன்பே தக்க பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமையல்லவா?

மதவெறியர்களை உடனடியாகக் கைது செய்து கருத்துச் சுதந்திர உரிமையைக் காவல்துறையும், தமிழ்நாடு அரசும் நிலை நிறுத்த முன்வர வேண்டும். ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருக்கிறது' என்று மற்றவர்கள் பேசுவார்களே என்ற கவலை கூடவா இந்த அரசுக்கு இருக்காது?

இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச்சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது; ஒட்டுமொத்த கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட போர்! இதற்குத் தக்க பதிலடியை - வன்முறையால் அல்ல - ஒன்று திரண்டு ஓங்கிய குரலால், ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒலிக்க முன்வர வேண்டும் - முறியடிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DK chief K. Veeramani has condemned the attack on Puthiya Thalaimurai TV office in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X