கோபாலபுரம் இல்லத்தில் கமல்ஹாசன்.. கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று இருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி தற்போது வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.

Kamal goes gobalapuram house to check DMK head Karunanidhis health condition

காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் இப்போது கொஞ்சம் தேறி வருவதாகவும் அவர் நல்ல உடல்நலனுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று இருக்கிறார். அவரது இல்லத்தில் சென்று அவர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.

Kamal goes gobalapuram house to check DMK head Karunanidhis health condition

கருணாநிதியின் உடல்நலன் குறித்து அவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார். இன்று இரவும் இன்னும் சில தலைவர்கள் அவரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அவரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+